நம்ம தம்பி சுபாஷ் அவர்கள் இந்த தொடர் ஓட்டத்துக்கு மிகுந்த பாசத்துடன்
( கொலைவெறியுடன் ) அழைத்திருந்தார் ... அவருக்கு என்னுடைய மனமார்ந்த (கொலைவெறி ) நன்றிகள் .... ( அப்புறம் முக்கியமா நீங்க பின்குறிப்ப படிச்சே ஆகணும் )
இந்த தொடர்பதிவானது முதலில் திரு ஊரோடி அவர்களிடம் இருந்து ஆரம்பித்து பிறகு மாயா வழியாக தம்பி சுபாஷை அடைந்து இப்பொழுது ( உங்க பொல்லாத நேரம் ) என்னை வந்து அடைந்து உள்ளது ...
இதையே ரொம்ப சுளுவா சொல்லனும்னா,
ஊரோடி-> மாயா -> சுபாஷ் -> அணிமா ( உருப்புடாதது )
எனக்கு ஒன்னு மட்டும் புரியில , இந்த சுபாஷுக்கு என்ன தைரியம் இருந்தால், என் மேல எவ்ளோ நம்பிக்கை இருந்தால் என்னை போயி இந்த மென்பொருள் விளையாட்டுக்கு கூப்பிட்டு இருப்பார்... என்னவோ போங்க ஒண்ணு மட்டும் உறுதியா தெரியுது ஏதோ என்னை இந்த ஆட்டத்துல சேர்த்து விட்டு கும்மு கும்முன்னு கும்ம ஒரு காரணம் கிடைச்சுடிச்சு அவருக்கு ..
( இது இல்லனா மட்டும் சும்மாவா இருப்போம். நீ என்னத்த கிறுக்குனாலும் அது தான் நடக்கும் அப்படின்னு அந்த பக்கத்து சந்துக்குள்ள இருந்து சவுண்ட் உட்றது யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்...)
எனக்கு இந்த தொடரில் அகர வரிசைப்படி அமைப்பது கடினம் என்பதால் என்னுடைய கணினியில் உள்ள மென்பொருட்கள் பற்றிய பதிவு இதோ.. ( என்ன ஒரு பில்ட்டப்பு ?? )
Total Video Convertor -
எனக்கு மிகவும் பிடித்தமான மென்பொருள் இது..
எந்த video format என்றாலும் நமக்கு பிடித்தமான format ல மாற்றி பார்க்க மிகவும் நான் விரும்புவது இதை தான் .. ("Convert all video files to 3gp, mp4, psp, iPod, iPhone, swf, flv, DVD, VCD, Xbox360, PS3... !")
Easy Recovery Professional :
எதையாவது delete பண்ணிட்டு அப்புறமா குய்யோ முய்யோன்னு கத்துறது தான் என் பாலிசி.. அப்படி பட்ட நேரங்களில் எனக்கு மிகவும் பயனுள்ளது தான் இந்த மென்பொருள்..

முக்கியமா இந்த USB டிரைவ் ல கோப்புகளை சில நேரங்களில் format செய்து விட்டால் எனக்கு மீண்டும் recover பண்ண இந்த மென்பொருள் தான் வசதி /..
opera , Mozilla Firefox :
நான் இணையத்த உலா வர அதிகம் பயன்படுத்துவது இவர்கள் இருவரையும் தான்..
Face on BOdy :

எப்போவாச்சும் போர் அடிச்சா இத ஒப்பின் பண்ணி நண்பர்கள் படத்தை morph பண்ணி அவர்களுக்கு அனுப்பி அவர்களை ரணகளம் ஆக்க பயன்படுத்துவேன்.. நம்ம முகத்தை கழுத்து வரை வெட்டி , அப்புறமா அதை morph பண்ணி, ஒரே கொண்டாட்டம் தான் போங்க...
Internet Download Manager :
எல்லா விதமான கோப்புகள் மற்றும் சினிமா videos, flv video மற்றும் எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்ய நான் உபயோகபடுத்துவது...
வெரி வெரி குட் ஒன்... ( அதிகமா இந்த புது படங்களை இணையத்தில் இருந்து இதன் மூலம் தான் தரவிறக்கம் செய்வேன் ) இதில் இருக்கும் resume வசதி இதற்க்கு மேலும் சிறப்பு ..
Your Unistaller 2008 :

என்னுடைய மடிக்கணியில் எதாவது மென்பொருட்க்களை uninstall செய்ய நான் அதிகம் பயன்படுத்தவது இந்த மென்பொருளை தான். இதின் சிறப்பம்சம் என்னவென்றால் இது நம்ம program files உள்ள registry keys எல்லாவற்றையும் uninstall செய்து விடும்..
Realplayer :

பாடலோ, படமோ, flv வகை வீடியோக்களோ என்னுடைய விருப்பம் இதுதான்.
இதை பற்றிய விளக்கங்கள் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்..
Solid convertor pdf:


அப்புறம் இன்னும் சில கொசுறுக்கு ::
Website Ripper Copier - ஒரு இணைய பக்கத்தை அப்படியே சேமித்து பிறகு நேரம் கிடைக்கும் போது படித்து கொள்ள..
Gimp :

WinRar/WinZip: கோப்புகளை சுருக்க மற்றும் விரிக்க ( தமிழாக்கம் சரிதானே??)
NHM Writer: சூரியனுக்கே டார்ச்சா??
அப்புறம் Folder access : நம்ம கோப்புக்களை பத்திரமாக கடவு சொல் கொண்டு பத்திரப்படுத்த நான் உபயோகிப்பது folder access.
அம்புட்டு
தாங்க... இதுக்கு மேலயும் இருக்கு ஆனா அது எல்லாம் எல்லோரும் அதிகமா யூஸ் பண்றது தான்.. அதனால நான் இதோட நிப்பாட்டிக்குறேன் ..
இதில் கூட
நான் மேலே சொன்ன எல்லா மென்பொருட்க்களும் எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும் இந்த விளையாட்டு நான் அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள் பற்றியது தானே.. அதனால கோச்சுக்காம இம்புட்டு நேரம் படிச்சதுக்கு நெம்ப நெம்ப நன்றிங்க ,....
அப்புறம் இந்த தொடர் விளையாட்டுல யாரையாச்சும் கோது விடுனுமாம்,.. பட் பாருங்க எனக்கு தான் மத்தவங்களை மாட்டி விடுறதுன்னா பிடிக்கவே பிடிக்காதே.. ( பொய் சொல்லவேஇல்லை உண்மை உண்மை ) இருந்தாலும் இந்த தொடர் விளையாட்டும் பல பேர் சென்று அடைய இதோ நான் அழைக்கும் நால்வர் படை
( இதில் உங்கள் விருப்பம் போல நீங்க எத்துனை பேரை வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.. எதுவும் வரைமுறை கிடையாது )
அதனால் நான் இந்த முக்கியமான ( எனக்கு அதிகம் தெரிந்த ) நால்வர்..

௧. மகேஷ் அண்ணாச்சி - காஷ்மீர் சுத்தி பார்த்து போதும் .. அப்படியே இந்த விளையாட்டுக்கும் வாங்க பிரதர்

௨. நசரேயன் - பதிவர் சந்திப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்.. இந்த தொடர் விளையாட்டுக்கு உங்க பங்கு முக்கியம் அதனால வந்து மறக்காம பதிவு போடுங்க..

௩. பழமைபேசி ஐயா : அண்ணே பாட்டுக்கு பாட்டு, கவிகாள மேகம் அவுங்களுக்கு நேரம் ஒதுக்குன மாதிரி அப்படியே இதுக்கும் ஒதுக்கி போடுங்க உங்க பதிவ..( ஜுன்னூன் தமிழ் )
மற்றும்

4. குடுகுடுப்பை : உங்களுக்கு நான் என்ன புதுசா சொல்ல??? வந்து போடுங்க உங்க பொன்னான பதிவை..
பின்குறிப்பு :
பதிவு போட ஒரு விசயமும் இல்லாம மோட்டு வளையத்தை பாத்துக்கிட்டு இருந்த போது எனக்கு அழைப்பு விடுத்த தம்பி நல்லா இருப்பா.. பதிவு போட எனக்கு இந்த தாவு தீருது, சும்மா அசால்ட எப்படி தான் தினத்துக்கும் ஒரு பதிவு போடுறாங்களோ நம்ம வலைப்பதிவர்கள்... நீங்க எல்லாம் ரொம்ப ரொம்ப கிரேட்டுங்க...
அப்படியே, நீங்களும் இந்த தொடர்பதிவை தொடர சிலரை அழைத்து இந்த தொடரும் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.
அப்புறம் இந்த பதிவில் நிறைய ஆங்கில வார்தைகள் கலந்து இருப்பதினால், தமிழ் அறிஞர்கள் மன்னிக்க வேண்டுக்கிறேன்..
test
ReplyDeleteTest 2
ReplyDeleteஆமா நீங்கல்லாம் எதப் பத்தி பேசிட்டு இருக்கீங்க....
ReplyDeleteநரேஷ்
http://nareshin.wordpress.com/
Again Test
ReplyDeleteஎத்தன டெஸ்ட்??? :))முதல் முதல்ல உங்க பதிவுல மீ த ஃபர்ஸ்ட் போடலாம்ன்னு நினைச்சேன் பட் அப்ப உங்க கமென்ட் பாக்ஸ் வொர்க் பண்ணல... :((
ReplyDelete// ( இது இல்லனா மட்டும் சும்மாவா இருப்போம். நீ என்னத்த கிறுக்குனாலும் அது தான் நடக்கும் அப்படின்னு அந்த பக்கத்து சந்துக்குள்ள இருந்து சவுண்ட் உட்றது யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்...) //
ReplyDeleteயாருங்க அது, எனக்கு மட்டும் சொல்லுங்க.
யோவ் என்னா டெஸ்ட்-ஆ பண்ணிகினு கீற?
ReplyDeleteஉன்னோட ப்லோக் பேஜு லோடு அகரத்துக்கு ரொம்ப டைம் ஆகுதே கவனிச்சியா?
RSS Feed உம் வேலை செய்ய மாட்டேங்குது. கொஞ்சம் கவனிப்பா.
நல்ல உருப்படியான தொடர்ப்பதிவு.. வாழ்த்துகள்.. :)))
ReplyDelete////நரேஷ் November 06, 2008 3:03 PM
ReplyDeleteஆமா நீங்கல்லாம் எதப் பத்தி பேசிட்டு இருக்கீங்க....
நரேஷ்
http://nareshin.wordpress.com/////
அது தெரியாம தானே இவ்ளோ நாளா கிடக்குறோம்....
///////ஸ்ரீமதி
ReplyDeleteஎத்தன டெஸ்ட்??? :))முதல் முதல்ல உங்க பதிவுல மீ த ஃபர்ஸ்ட் போடலாம்ன்னு நினைச்சேன் பட் அப்ப உங்க கமென்ட் பாக்ஸ் வொர்க் பண்ணல... :((
/////////
அப்பவாச்சும் பரவால்ல, இப்போ என்னால இந்த பதிவ கூட தமிழ்மணத்துல இணைக்க முடியவில்லை..
சும்மா இல்லாம எதையோ நோண்டிட்டு இப்போ வருத்தப்பட்டுகிட்டு இருக்கேன்
////pathivu
ReplyDeleteயாருங்க அது, எனக்கு மட்டும் சொல்லுங்க.////
சவுண்ட் உட்டதும் இல்லாம, யாருன்னு கேள்வி வேற??
///pathivu
ReplyDeleteயோவ் என்னா டெஸ்ட்-ஆ பண்ணிகினு கீற?
உன்னோட ப்லோக் பேஜு லோடு அகரத்துக்கு ரொம்ப டைம் ஆகுதே கவனிச்சியா?
RSS Feed உம் வேலை செய்ய மாட்டேங்குது. கொஞ்சம் கவனிப்பா./////
சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி, நல்லா இருந்தத அத செய்யுறேன், இத பண்றேன்னு சொல்லிப்பிட்டு, இப்போ ஒன்னும் புரியாம என்ன செய்யுறதுன்னு தெரியாம கிடக்குறேன்..
யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்கப்பா ..
என்ன நடக்குதுன்னே தெரில எனக்கு..
யாரோ திட்டமிட்ட சதின்னு நினைக்குறேன்
///ஸ்ரீமதி
ReplyDeleteநல்ல உருப்படியான தொடர்ப்பதிவு.. வாழ்த்துகள்.. :)))
/////
நெம்ப நன்றிங்கோ ...
???????????????
ReplyDeleteநான் போட்ட பின்னூட்டம் எங்கே, முத பின்னூட்டமே என்னோடது தான்.
ReplyDeleteஅடுத்ததா நானும் பதிவ போட்டிடுரேன்.
அப்புறம் நம்ம கடை பக்கம் ஆளயே கானோம்.
////வருங்கால முதல்வர்
ReplyDeleteநான் போட்ட பின்னூட்டம் எங்கே, முத பின்னூட்டமே என்னோடது தான்.
அடுத்ததா நானும் பதிவ போட்டிடுரேன்.
அப்புறம் நம்ம கடை பக்கம் ஆளயே கானோம்.////
ஐயா.. மன்னிச்சுடுங்க.
கொஞ்சம் பிரச்சனை.. அதனால தெரியாதனமா உங்க கமெண்ட் அழிக்க வேண்டியதா ஆயிடுச்சு..
மறுக்கா கேட்டுக்குறேன்..
மன்னிச்சுடுங்க முதல்வர்..
ஒரு வாரமா வலையில காணோம்! சரி, இன்னைக்கு வந்தாச்சு!!
ReplyDeleteவந்ததும் நம்ம பக்கம் வந்திருந்தா, நல்ல மனுசன்னு சொல்லலாம். அதான் வரலையே? அப்புறம் எப்படி சொல்லுறது??
அங்க தான் வந்துகிட்டு இருக்கேன் முதல்வரே...
ReplyDeleteஅது சரி, இன்னா இது? வாரா வாரம் மெருகு கூடிகினே இருக்கு?? ஊர் மாறுனா வண்ணமும் மாறனுமோ??
ReplyDelete////////பழமைபேசி சொன்னது…
ReplyDeleteஒரு வாரமா வலையில காணோம்! சரி, இன்னைக்கு வந்தாச்சு!!
வந்ததும் நம்ம பக்கம் வந்திருந்தா, நல்ல மனுசன்னு சொல்லலாம். அதான் வரலையே? அப்புறம் எப்படி சொல்லுறது??////////
நான் நெம்ப நல்லவன் தாங்க...
என்ன பண்றது.. ஒரு வாரமா நம்ம பக்கம் பயங்கர வறட்சியா போயிடுச்சு..
இனி வந்தாச்சு..
பழையபடி...
///பழமைபேசி சொன்னது
ReplyDeleteஅது சரி, இன்னா இது? வாரா வாரம் மெருகு கூடிகினே இருக்கு?? ஊர் மாறுனா வண்ணமும் மாறனுமோ??////
அட நீங்க வேற?? நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்...
தமிழ்மணத்துல எதையும் இணைக்க முடியாம... உஸ்ஸ்...
அதுக்கே தனியா ஒரு பதிவு போடலாம்.
நல்ல நல்ல மென்பொருள்கள்...நன்றி.
ReplyDeleteஅன்புடன் அருணா
////Aruna சொன்னது…
ReplyDeleteநல்ல நல்ல மென்பொருள்கள்...நன்றி.
அன்புடன் அருணா////
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அருணா அவர்களே
தொடர்ந்து பதிவு போட்டாச்சுண்ணே !!!
ReplyDelete//மறுக்கா கேட்டுக்குறேன்..
ReplyDeleteமன்னிச்சுடுங்க முதல்வர்..//
யாரப்பாத்து முதல்வர் சொல்றீங்க, நான் நிரந்த வருங்கால முதலவர்.
Mahesh சொன்னது…
ReplyDeleteதொடர்ந்து பதிவு போட்டாச்சுண்ணே !!!///
nandringanna...........
வருங்கால முதல்வர் சொன்னது…
ReplyDeleteயாரப்பாத்து முதல்வர் சொல்றீங்க, நான் நிரந்த வருங்கால முதலவர்./////
//மறுக்கா கேட்டுக்குறேன்..
மன்னிச்சுடுங்க வருங்கால முதல்வர்..//
உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் மிக்க நன்றிகள்.
ReplyDeleteஉயர்கலிவி நிமித்தமாக பல வேலைகள். வெறுத்துவிட்டது.
ஒருவளியாக புதிய லேப்டாப்பொண்ணும் 2 நாள் முன்னாடி வாங்கி இணையமும் ஓகேயாச்சு ( அப்பாடி. ஒரு வளியா சொல்லியாச்சு )
இனி தொடர்ந்தும் அனைவருடனுமிருப்பேன்.
மிக்க நன்றிகள்.
அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள் அணிமா. பின்னிட்டீங்க !!!!
ReplyDelete