Friday, September 12, 2008

ஓணம்- மறைக்க பட்ட உண்மைகள்




மன்னிச்சுடுங்க.. மறுக்கா சொல்றேன், தயவு செய்து மண்ணிச்சுபுடுங்க....

இப்படி எல்லாம் தலைப்பு போட்டாவது, நீங்க யாராச்சும் இந்த பக்கம் எட்டி பாக்குறீங்கலான்னு பாக்கத்தான், வேற ஒன்னும் இல்ல..
சரி வந்தது தான் வந்துட்டீங்க, அப்படியே இதையும் படிச்சுட்டு போய்டுங்க...
(
சும்மா போகாதீங்க , எதுனா கருத்து சொல்லிபுட்டு போங்க மக்களே.. )




கேரளா ம‌க்க‌ளி‌ன் ‌மிமு‌க்‌கிய‌பப‌ண்டிகையான ‌திரஓண‌மப‌ண்டிகை இன்று அதாவதவெ‌ள்‌ளி‌க்‌கிழமகொ‌ண்டாட‌‌ப்படு‌கிறது.

கேரள மக்களின் வசந்த கால விழாவாக ஓணம் கொண்டாடப்படுகிறது. மாவேலி சக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளாக ஓணம் கருதப்படுகிறது. அன்றைய தினம் பூக்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும். மாவேலி மன்னனை மக்கள் அன்புடன் வரவேற்று உபசரிக்கும் இந்த விழா கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். அதாவது ஆ‌ன்‌‌மீவரலா‌ற்‌றி‌னஅடி‌ப்படை‌யி‌லம‌ன்ன‌னமஹாப‌லி‌யவரவே‌ற்கு‌ம் ‌விதமாகேரம‌க்க‌ளஓ‌ண‌மப‌ண்டிகையை‌ககொ‌ண்டாடு‌கி‌ன்றன‌ர்.

மலையாமாதமான ‌சி‌ங்க‌மமாத‌த்‌தி‌னதுவ‌க்க‌‌மதா‌னஇ‌ந்த ‌திரஓ‌ண‌ம் ‌தினமாகு‌ம். த‌மிழ‌ர்க‌ளி‌னபொ‌ங்க‌லப‌ண்டிகைய‌ை‌பபோ‌ன்றஇதஒரு ‌விளை‌ச்ச‌ல் ‌திரு‌விழஎ‌ன்று‌மகூறலா‌ம்.

ஓண‌மப‌ண்டிகைய‌ன்றஅ‌திகாலை‌யி‌லக‌ண் ‌வி‌ழி‌த்தபு‌த்தாடஅ‌ணி‌ந்து ‌திருவா‌திரை‌கக‌ளி செ‌‌ய்தஉ‌ண்டு, ‌வீ‌ட்டவா‌யி‌லி‌லபூ‌க்களா‌லகோல‌‌மி‌ட்டு, பெ‌ண்க‌ளநடனமாடுவது ‌சிற‌ப்பானதஆகு‌ம்.

ஓணம் என்பது பாத்து நாட்கள் நடக்கும் விசேஷம் ஆகும்.

முதல் நாள் அத்தம் என்று சொல்வார்கள் .,. இன்று தான் பெண்கள் பூக்கோலம் இடுவார்கள் .. கேரளாவில் இதை அத்தபூ என்றும் சொல்வார்கள் .

சித்திரா : இது இரண்டாம் நாள் பண்டிகை. இன்று வயசு பெண்கள் புது புது பூக்களை முதல் நாள் போட்ட பூகோளத்தில் இடுவார்கள்..

ஜோதி : ( மூன்றாவது நாள் )

விசாகம்: ( நான்காம் நாள் )

அணிலம் : ( ஐந்தாம் நாள் )



த்ரிகேட்ட : (ஆறாம் நாள் )



மூலம் : ( ஏழாம் நாள்)



பூராடம் : (எட்டாம் நாள் ) -- மாவேலி , மகாபலி

உத்திராடம் : ( ஒன்பதாம் நாள் )

திருவோணம் :( கடைசி நாள்)




எல்லாத்துக்கும் ஓணம் நல் வாழ்த்துக்கள்..

(
நாங்களும் நல்ல பதிவு போடுவோம்ல)
(
இது நல்ல பதிவான்னு நீங்க யாரும் முடிவு எடுக்க வேணாம், நாங்களே எடுதுடுவோம்ல, !!!.. ஏன்னா, உங்களுக்கு எதுக்கு அந்த கஷ்டம்??)


இது நம்ம மலையாள கரையோர பூக்கள்.. சும்மா ஒரு பொழுது போக்குக்கு தான்..






Monday, September 8, 2008

ஆப்புரைசலில் ஆப்புஅடித்த ஆப்புரைசெர் நல்லா இருங்கடா..


முன் குறிப்பு: இந்த புகைப்படத்துக்கும், பதிவுக்கும் சம்பதம் உண்டு ..









சரி சரி போட்டோவ பாத்துடீங்க இல்ல..
இப்போ பதிவுக்கு போகலாம் வாங்க... என்னை என்ன பண்ண சொல்றீங்க?? ரொம்ப நாளா என்னை இந்த பக்கம் காணோம்ன்னு நம்ம நண்பர்கள் ( உண்மைய சொல்லனும்னா எதிரிகள் - நம்மள அடி வாங்க வுட்டு வேடிக்கை பாக்குரவங்க) சிலர் அக்கறையா கேட்டாங்க..

அவீங்களுக்கு
எல்லாம் பதில் சொல்றதுக்கு தான் இந்த பதிவு.. பலருக்கு தெரியும் நமக்கு எந்த வேலையும் உருப்புடியா , நிலையா இருக்காது.. எதுனா செஞ்சுட்டு அந்த கம்பெனியே நம்மள பாசமா வெளிய போங்க அப்படின்னு சொல்ற அளவுக்கு நம்ம கடமைய அந்த கம்பனிக்கு காட்டுவோம்..

அப்படி
இருக்குற பொது, ஒரு நாள், உனக்கு இந்த தேதியில ஆப்பு ரைசல் அப்படின்னு சொல்லிட்டு போனாங்க.. எனக்கு மனசுக்கள்ள ஒரே குஜால போய்டுது.. எப்படியும் இந்த ஆப்பு ரைசல்ல நல்லா புள்ளையா பேரு வாங்கி, அப்படியே நம்ம இமேஜையும் , ஏத்திக்கிட்டு நம்ம கம்பெனி இமேஜையும் ஏத்தனும் அப்படின்னு முடிவு பண்ணேன்.


நமக்கு
ஏத்த அந்த நாளும் வந்துச்சு.. ரொம்ப தெனாவட்டா உள்ள போனேன்.. அங்க நாலு பேரு அவங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ டார்ச்சர் பண்ணாங்க.. நாம தான் எது வந்தாலும் தாங்குற மனசு உள்ளவங்க ஆச்சே.. அதனால நானும் சரா மாரியா அவிங்க கேள்விக்கு எல்லாம் பதிலே சொல்லாம அவங்களையே மொறச்சி மொறச்சி பாத்துக்குட்டு இருந்தேன்.. அவங்களும் இதுக்கு மேல கேக்க முடியாதுன்னு ஒரு லெவெலுக்கு வந்துட்டாங்க.. ( நமக்கும் அது தானே வேணும்னு அப்படியே இருந்தேன்..)

அப்புறமா
கடைசியா, இந்த கம்பெனி உங்களுக்கு எதாவது செய்யனும்னு நினைக்குறீங்கலான்னு ஒரு கொக்கி போட்டாங்க.. நமக்கு தான் கொக்கி போட்டா உடனே மாட்டிக்கிற வியாதி இருக்குல்ல?? அதனால நானும் போயி வலிய மாட்டிக்கிட்டேன் .. என்ன அப்படின்னு கேக்குரீங்களா?? எனக்கும் என்ன ஆப்பு அடித்த ஆப்பு ரைசருக்கும் நடந்த பேட்டி சாரி உரையாடல நீங்களும் தான் கேளுங்களேன்....

ஆப்பு ரைசெர் : சொல்லுங்க அணிமா ( உருப்புடாதது.... இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல)) உங்களுடைய தேவைகள் எதுனா இருக்கா..??


நான் ( நான் தான்) : ( மனசுக்குள்... என்ன இப்படி கேக்குறாங்க.. எதுனா பெருசா கேட்டு வைப்போமா???அப்படின்னு நினைச்சுக்க்டே )) இல்ல சார் .. இந்த கம்பெனி எனக்கு எவ்வளோவோ குடுத்துருக்கு.. அப்படி ஒன்னும் பெரிசா இல்ல ...

ஆப்பு ரைசெர் : ச்சே ச்சே என்ன அப்படி சொல்லிட்டீங்க ,, சும்மா சொல்லுங்க .. கண்டிப்பா அதை நாங்க பரிசீலனை பண்ணுவோம்..

நான் ( நான் தான்) : ரெண்டு வருஷமா வேலை பாக்குறேன் .. கொஞ்சம் இந்த சம்பளம் அப்படின்னு சொல்லுவாங்களே அத கொஞ்சம் ஏத்தி கொடுத்தீங்கன்னா சௌகரியமா போகும்..

ஆப்பு ரைசெர் : அப்புறம் வேற எதுனா இருக்கா ??

நான் ( நான் தான்) : அப்படியே நம்ம பதவி உயர்வுக்கு எதுனா பண்ணுங்களேன் ...

ஆப்பு ரைசெர் : அவ்ளோ தான ???

நான் ( நான் தான்) : அவ்ளோ தான் சார்..

ஆப்பு ரைசெர் : ஆமாம் , அணிமா.. வருசத்துக்கு எத்தினி நாள் இருக்கு ??

நான் ( நான் தான்) : 365 சில நேரத்துல்ல 366 ..

ஆப்பு ரைசெர் : சரி.. ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் .. எங்க சொல்லுங்க பார்ப்போம் .

நான் ( நான் தான்) : 24 மணி நேரம் சார் ..

ஆப்பு ரைசெர் : ஒரு.. குட் குட்.. உங்களுடைய வேலை நேரம் என்ன ?? ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் வேலை பாக்குறீங்க ?

நான் ( நான் தான்) : காலையில 8 மணியில இருந்து சாயந்திரம் 4 மணி வரைக்கும் ..

ஆப்பு ரைசெர்: அப்போ ஒரு நாளைக்கு 24 மணி நேரத்துல, எத்தன பகுதி உங்க வேலை நேரம் ??

நான் ( நான் தான்) : ( ரொம்ப பந்தாவா... என்ன இந்த ஆளு இந்த மாதிரி கொக்கு மாக கேக்குறான்.. என்ன இருந்தாலும் நாம தான் கணக்குல கொட்டை எடுத்த புலி ஆச்சே..) மூனுல ஒரு பங்கு சார்.. அதாவது 8/24 அப்படினா 1/3

ஆப்பு ரைசெர் : .. வெரி குட்.. சரி அப்படியே மூனுல ஒரு பங்குன்னா 366 நாட்கள்ல , எத்தினி நாள் வரும் ??

நான் ( நான் தான்) : 122 நாள் சார் (( 1/3 X ௩௬௬ நாள் = 122 நாள் )

ஆப்பு ரைசெர் : வாவ்.. ரொம்ப வேகமா ஆன்சர் பண்றீங்க.. நீங்க இந்த வார் விடுமுறை நாட்கள்ல வேலைக்கு வருவீங்கல??

நான் ( நான் தான்) : இல்ல சார் .. வர மாட்டேன்.. அந்த நாட்கள்லதான் பிகரு ஓட்ட, சைட் அடிக்க எல்லாம் போவேன் ..

ஆப்பு ரைசெர் : ரொம்ப தம்மாச பேசுறீங்க.. வருசத்துக்கு எத்தனை வார இறுதி நாட்கள் வருது ??

நான் ( நான் தான்) : 52 சனிக்கிழமை , 52 ஞாயிறு கிழமை ,, மொத்தமா 104 நாள். ( எதுக்கு இந்த ஆளு இத்தினி டீட்டைலா கேக்குறான்??)

ஆப்பு ரைசெர் : சரி இப்போ சொல்லுங்க, இந்த 104 நாள்ல அந்த 122 நாள்ல கழிச்சா எத்தன நாட்கள் வருது ?

நான் ( நான் தான்) : 18 நாள் சார் .. ( 122- 104 = 18)

ஆப்பு ரைசெர் : வருஷா வருஷம் சிக் லீவ் அப்படின்னு உங்களுக்கு 14 நாள் லீவ் கொடுக்குறோம்ல அதனால அந்த 14 நாள இதுல இருந்து கலிச்சுடுங்க, இப்போ சொல்லுங்க எத்தினி நாள் வருது ??

நான் ( நான் தான்) : உம்... 4 நாள் வருது ... ( ஆஹா கண்ணா கட்டுதே )

ஆப்பு ரைசெர்: சொல்லுங்க போன வருஷம் குடியரசு நாள் அன்னிக்கு வேலைக்கு வந்தீங்களா ??

நான் ( நான் தான்) : இல்ல சார்.. ( ஒண்ணுமே புரியலையே !!!)

ஆப்பு ரைசெர் : அப்போ எத்தனை நாள் இன்னும் இருக்கு ?
நான் ( நான் தான்) : 3 நாள் சார் ..

ஆப்பு ரைசெர் : அப்புறம் இந்த சுதந்திர தினம் அன்னைக்கு வேலைக்கு வந்தீங்களா??
நான் ( நான் தான்) : இல்ல..

ஆப்பு ரைசெர் : இந்த கிருஸ்துமஸ் அன்னிக்கு ??

நான் ( நான் தான்) : இல்ல.. வரல

ஆப்பு ரைசெர்: இப்போ சொல்லுங்க இன்னும் மீதி எத்தினி நாள் இருக்கு ??

நான் ( நான் தான்) : ஒரு நாள் சார்..

ஆப்பு ரைசெர் : அப்படியா???? புது வருஷம் அன்னிக்கு ???

நான் ( நான் தான்) : அன்னைக்கும் வரல சார்..

ஆப்பு ரைசெர் : இப்போ சொல்லுங்க அணிமா.. மீதி எத்தனை நாள் இருக்கு ??

நான் ( நான் தான்) : ஒரு நாளும் இல்லை சார்

ஆப்பு ரைசெர் : ஒரு நாளும் வேலைக்கே வராம நீங்க எப்படி பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கேக்குறீங்க??

அப்படின்னு ஒரு போடு போட்டார் பாருங்க, அந்த நேரத்துல நம்ம மண்டை வெடிச்சி சிதறி.. என்னடா இது.. மதுரைக்கு வந்த சோதனைன்னு நினைச்சுகுட்டே..

நான் ( நான் தான்) : இப்போ புரியுது சார் .. இத்தினி நாளா வேலையே செய்யாம சம்பளம் வாங்கிட்டு இருந்துருக்கேன்.. அப்படின்னு சொல்லிட்டு இந்த வேலையையும் ராஜினாமா செஞ்சுட்டேன்.

ஆகவே மக்களே.. இந்த காரணத்துக்காக தான் நான் சில நாட்களா காணோம்னு சொல்லிகிறேன்.. ( ஆனாலும் இந்த கணக்கு தான் புரியாம குழம்பி போய் கிடக்குறேன்)

நீங்களே சொல்லுங்க.. நான் ஒரு நாள் கூட வேலையே பாக்குலயா??? அப்போ நான் என்ன தான் செஞ்சு கிட்டு இருந்தேன் ??

ஒண்ணுமே
புரில போங்க???..

புரிஞ்சவங்க எனக்கு புரிய வெச்சுட்டு போங்க... உண்மையிலே நான் புத்திசாலியா ??

இல்ல என்னை வெச்சு இவங்க எதுனா காமெடி பண்ணாங்கலா..

நீங்க
தான் இதுக்கு ஒரு முடிவு சொல்லணும்..

சொல்லுங்க
மக்களே சொல்லுங்க.. இந்த தன்மான சிங்கத்துக்கு ( நான் தான்..) ஒரு நல்ல நியாயம் கிடைக்க வழி சொல்லுங்க....













இடைவெளி அவசியமா??

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...