Friday, August 29, 2008

A For Apple...... தொடர் பதிவு!

வணக்கம் மக்களே,
உங்க எல்லோருக்குமே தெரியும், நான் இங்க வந்து பதிவு போட ஆரம்பிச்சு ஒருமாசம் தான் ஆகுது..
அதுக்குள்ள, யாரு கண்ணு பட்டுச்சோ தெரில ( போதும்டா பில்ட்டப்பு, மேட்டர்க்கு வான்னு நீங்க சொல்லறது என் காதுல கேக்குது ))
திடீர்னு நம்ம பழமைபேசி அண்ணாத்த, தம்பி உனக்கு ஒரு கொக்கிபோட்டுருக்கேன் வந்து நீயே அதுல மாடிக்கோனு சொல்லிட்டாரு..
சரி அப்படி என்ன தான் அந்த கொக்கி, ஒரு கை பாத்துடுலாம்னு நானும் போய்பார்த்தேன்..பாத்தா, அவரு நம்மள அலேக்கா தூக்கி இந்த தொடர் ஓட்டத்துலநீயும் ஓடுடா அப்படின்னு சொல்லிப்புட்டாரு..அதனால் இப்போ நானும் இந்ததொடர்ஓட்டத்துல .....

ஸ்டார்ட் மூஜிக் >>>>>>>


A . Aarampam.com
இங்க தான் நான் எப்பவும் புதுசா வந்த தமிழ் படங்களை பாக்குறதுவழக்கம்... நல்ல தளம்.. என்னை போல ஆப்ரிக்கா நாட்டுல இருந்தா எல்லாமேநல்ல தளம் தான்.


B. Bbc.co.uk./tamil
இங்க அப்போ அப்போ உலக செய்திகளை நம்ம தமிழில் படிகறதுக்காக இங்க வருவேன்.. ( என்னத்த படிச்சி என்னத்த கிழிச்சி??)))

C. Cric.info

எந்த ஊர்ல எந்த நாட்டுல கிரிக்கெட் நடந்தாலும் நமக்கு அப்டேட் ஸ்கோர்பாக்குற இடம் இதுதான்.. என்ன வேணா சொல்லுங்க இத அடிச்சுக்க வேறகிரிக்கெட் சைட் கிடையாது..


D. Download.com
நம்மகிட்ட ஒரு கெட்ட பழக்கம், எந்த சாப்ட்வேர் இலவசமா வந்தாலும்அத தேடி பிடுச்சி டவுன்லோட் பண்ணிடுவேன். அதுக்கு எப்பவும் டவுன்லோட்பண்ண நான் அதிகம் நம்புற ஒரு தளம் இது..

Dhina thanthi

நம்ம உள்ளூர் செய்திகளுக்காக படிக்கும் தளம். நம்ம பக்கத்து வீட்டு நாய்காணாமல் போன செய்திகள் கூட வரும்.. அப்போ எல்லாம் , எனக்கு கண்ணுலதண்ணி வரும் ( நம்புங்கன்னா))

E. E-snips
இங்க நமக்குன்னு ஒரு இடத்தை குடுத்து , கண்ணு இங்க நீ என்ன வேனாலும்பன்னிக்கோன்னு சொல்லி குடுத்துடுவாங்க..

F. flikr

நம்ம எடுத்த (போட்டோவ ) கண்டது போனது எல்லாம் இங்க தான்கொட்டுவேன்..

G. Google Maama
இவரு தான் எனக்கு எல்லாமே, எந்த சந்தேகம் வந்தாலும் இவரு தான் நமக்குதுணை.. கூகிள் ஆண்டவரே துணை ..


H. Hsbc

என்னை மாதிரி வெளிநாட்டுல இருக்குறவங்க ரொம்ப பேரு யூஸ் பண்றவங்கி இது தான்னு நினைக்குறேன்.. நம்ம டாலருக்கு நல்ல மதிப்புகுடுக்குறாங்க.. அதனால எப்பவும் நம்ம அக்கௌண்ட செக் பண்றதுக்கு இங்கதான் போவேன்.

I. Ibnlive
நம்ம இந்தியா செய்திகளை பார்க்க, நான் அதிகம் விரும்பும் ஒரு தளம்.

J. JayaTv

இங்க நைஜீரியாவுல தமிழ் சேனல்ன்னு பாத்தா அது ஜெயா டிவி தான். அதனால்நிகழ்ச்சி நிரல், எப்போ என்ன ப்ரோக்ராம் அப்படின்னு பாக்க இங்க தான்வருவேன். ( என்ன பண்றது நம்ம தலை எழுத்து ஜெயா டிவி எல்லாம் பாக்கவேண்டியதா இருக்கு)

K. Kumudam

இது சின்ன வயசுல இருந்து படிச்சிகிட்டு வர வார இதழ்.. அதனால் எல்லாவாரமும் உள்ள நுழைஞ்சு, குமுதம், ரிப்போர்ட்டர் அப்படின்னு எல்லாத்தையும்படிச்சுடுவேன்.

M.Micfrosoft

எதுனா புதுசா வந்துருக்கா அப்படின்னு தெரிஞ்சுக்க உள்ள போவேன்.. ( அப்புறம் ஒன்னும் இல்லன்னு வெளிய வருவது வேற விஷயம்)

N. Nasa

உண்மையிலே எனக்கு மிகவும் பிடித்த தளம் இது.. புது புது முயற்சிகள், அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் நம்ம சந்தேகளுக்கு கூட பதில்தருகிறார்கள்)

O. Orkut

இதுக்கு முன்னுரை தேவையா.. இன்றைய இளைஞர்களுக்கு இது ஒருவரபிரசாதம் ( நானும் இளைஞன் தான்.. நம்புங்கப்பா

P. Picasa

அழகான தளம்.. இதுவும் நான் எடுத்த, பிடித்த படங்களை ஷேர் பண்ணஅடிக்கடி வரும் தளம் இது.


Q. Quillpad

முன்பு அடிக்கடி பார்க்கும் தளம்.. தமிழில் டைப் அடிக்க இங்கு தான் போவேன். அப்புறம் கூகிள் வந்தேன்,. இப்போ NHM WRITER யூஸ் பண்றேன்.

R. Raaga

நான் எப்பவும் விரும்பி பாடல்கள் கேட்க விரும்பும் தளம் இது.. எல்லாமொழிகள் பாடல்கள், எப்பொழுதும் என்னுடைய பேவரைட்...


S. Scribd.com

நான் விரும்பும் பல இணைய புத்தகங்கள் படிக்கவும், தரை இறக்கவும்உபயோக படத்தப்படும் தளம்.

T. Tubetamil.com

நம்ம தமிழ் சேனல் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் பார்க்கஎன்னுடைய சாய்ஸ் இது தான்.

TamilBridge.com

நம்ம போல வெளிநாட்ல இருக்குற தமிழ் மக்களுக்காக, கொஞ்ச நேரம்சாட் பண்ண விரும்பும் இடம் இது.. அப்போ அப்போ கொஞ்ச நேரம் மொக்கைபோட்டுட்டு இருக்க நான் விரும்பி போவேன்..

W. wikipedia

எது தெரியனுமோ அது நன்றாகவே தெரிஞ்சுக்க இங்குட்டு தான்வருவேன்..


X. Xbox

நமக்கு இந்த x-box கேம்ஸ் விளையாட்டுன்னா ரொம்ப பிடிக்கும். அதுனாலமார்கெட்ல புதுசா எதுனா வந்துருக்கான்னு பாக்க இங்க வருவேன்.

Y. Youtube

இவங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை... எந்த விடியோவைதேடினாலும், நொடியில் பார்க்க நான் விரும்பும் தளம்.

Z. Zedge.net

நம்ம மொபைலுக்கு எந்த சாஃப்ட்வேர் வேணும்னாலும், வால் பேப்பர்ஸ், தீம்ஸ், etc etc.. என்னுடைய பேவரைட் place இது தான்.

இப்போ நானும் கொக்கி போடுனுமம்ள..
யாருக்கு கொக்கி போடுறது ???

1. Subash - மாட்டிகிட்டியா?? ( ரொம்ப நாளா ஆளையே காணும்))
A for Apple pathivu - subash

2. மோகன் - வாங்க வந்து ஜோதில கலுந்துக்குன்க்

A for Apple pathivu - Mohan

3. விஷ்ணு - என்னங்க இது போதுமா ??

A for Apple pathivu - Vishnu


Rule:The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites
Tag 3 People.






Friday, August 22, 2008

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது.. ???



நான்
என்னங்க பண்றது ??
நான் பாட்டுக்கு அமைதியா , ஒரு ஓரமா தான் நடந்துபோய்குட்டு இருந்தேன்..


அப்போ
தாங்க அத பார்த்தேன்.
பார்த்தும்
உண்மையிலேதிகைச்சி போய்டேன்..

எப்படி
இது??

யாருமே
பார்க்கலயா?

இல்ல பாத்தும்பாக்காத மாதிரி போறாங்கள?? ஏன் எல்லோரும் இப்படி மனித நேயமே இல்லாமஇருக்காங்க..

யாருக்கும்
அதை பாத்து அட்லீஸ்ட் ஒரு பரிதாபம், இல்ல கருணை.. ச்சே என்னமனிதர்கள் இவர்கள்..

ஆண்கள்
மட்டும் தான் சிலபேர் கவணித்து இருந்தீர்பார்கள்என்று நம்புகிறேன்.. பெண்கள் பற்றி... சொல்லவே வேண்டாம் ..
இருந்தாலும்
.. இப்படி ஒரு நிகழ்வு , அதும் பல பேர் வந்து செல்லும் சாலையில், சாலை ஓரத்தில் நடக்கும் போது.. ,,
நான்
என்ன செய்யுறது ... சாலையில், அதுவும் சாலை ஓரத்தில் இருந்த மிக பெரிய பள்ளத்தை ஏன் யாரும்பாத்தும் பாக்காத மாதிரி போகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை..

அப்பொழுது
தான் அதை கவணித்தேன்.. அந்த பள்ளத்தை.. அதை யாரும்பார்க்காத போது அதை மூடி விடலாம் என்று நினைத்தேன்..

இதில்
எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை..

மெதுவாக
அருகில் சென்று மூடிவிடலாம் என்று கையை...

பிறகு..... என்ன பாக்குறீங்க...


^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^




இப்போ நான் மருத்துவ மனையில் இருக்கேன்... இன்னும் ஒரு மாசத்துக்கு எனக்கு லீவ்... நமக்கு சமூக ஆர்வம் இருத்தல் அது தப்பா..??


நீங்களே
பாருங்கள், நான் மூட கைய வெச்ச பள்ளத்த..

^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^ ^












இதுக்கு
போய் என்னை காட்டு அடி அடிச்ச எல்லோரும் நல்ல இருங்கடா...

டிஸ்கி
1: இதுல தப்பு கண்டு பிடிக்க கூடாது... ஏனா நான் ரொம்ப நல்லவன்.. டிஸ்கி : இதை நகைச்சுவையாக மட்டும் பார்க்க வேண்டும்..

இடைவெளி அவசியமா??

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...