Wednesday, October 15, 2008

கோத்து விட்டுட்டாங்க - சினிமா - சில நினைவுகள் (தொடர் பதிவு)



எனக்கு பதிவு எழுத மேட்டர் புடிச்சு கொடுங்க அப்படின்னு நானும் எல்லோர்கிட்டயும் ஐடியா கேட்டுக்கு இருந்த நேரத்துல, நம்ம அன்பு அண்ணன், திரு மகேஷ் அவர்கள் எனக்கு இந்த கொக்கி போட்டு கூப்பிட்டார். தொடரை தொடர அழைத்ததற்கு மிக்க நன்றி.. ( சொல்ல போனா பதிவு ஒன்னு போட ஐடியா குடுத்ததற்கு )

( சரியான விடைகளை தேடாதீர்கள் , எனக்கும் பரிட்சைக்கும் ஆகவே ஆகாது..விடைகள் சரி இலலை என்றால் பொறுத்தருள்க )

இப்போ கேள்வி பதில் பகுதிக்கு செல்வோமா??





1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எனக்கு நினைவு தெரிந்த வயதில் தான் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன் ( எனக்கு எந்த வயசுல நினைவு தெரிந்தது அப்படினெல்லாம் கேக்க கூடாது, சொல்லிபுட்டேன் ) ( இருந்தாலும் முயற்சி பண்ணி பார்த்ததுல அது எப்படியும் ஆறு அல்லது ஏழு வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன் )

நினைவே தெரிந்து கண்ட முதல் சினிமா என்றால், அது வந்து, ஐயோ நியாபகம் வர மாடேங்குதே ?? ஹ் , நியாபகம் வந்துடுச்சி .. ஏதோ நம்ம விசயகாந்து படம்னு ( கரிமேடு கருவாயன் ) நினைக்குறேன்.. பாதி படத்துலே அலுத்து அடம்புடிச்சி வெளியே வந்ததா நியாபகம் ( அப்பவே பாருங்க நம்ம கேப்டன் படாத பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன் )

அந்த வயசுல நான் என்னத்த உணர்றது ? ஒண்ணுமே நினைவில் இல்லை.. அதனால் கேள்வியை நான் வாபஸ் வாங்கிக்கிறேன் ..



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?



கடைசியா நான் அமர்ந்து பாத்த தமிழ் சினிமா சிவாஜி ...
பாத்துட்டு டரியல் ஆனது வேற கதை... (ஸ்ரேயா நெம்ப அழகு ) ( இங்கு நான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை சொல்லி கொள்கிறேன்)



3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


நேற்று இரவு வெற்றிகரமா நாலாவது தடவையா வால் - இ படம் டி வி டியில் பார்த்தேன்..
வசனமே இல்லாமல், ஒரு அழகான காதல் கதை பார்க்கும் உணர்வு..
ரசித்து , உணர்ந்து பார்த்தது... ( என்னது இது தமிழ் சினிமா இல்லியா???) ( என்ன பண்றது தப்ப பதில் சொல்றது தானே நம்ம பழக்கம்)



4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மிகவும் தாக்கிய அப்படின்னா சந்திரமுகிய சொல்லலாம், என்ன, படம் ரிலீஸ் ஆன மொத நாளில் ( நடு இரவு ) அதி காலையில் 3 மணிக்கு டிக்கெட் வாங்க போய் போலீஸ் மாமாக்கள் தாக்கியது நினைவில் உள்ளது..

சீரியஸா சொல்லனுமா , காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் சீன் மிகவும் தாக்கியது ( பிடிச்சி இருந்ததுன்னும் சொல்லலாம்) அது ஏனோ தெரியல அப்போ நான் விடலை பருவத்தில் இருந்ததனால் கூட இருக்கலாம்..( நம்புங்க நான் சின்ன பையன் தான்)
அப்புறம் மனதை பாதித்த மற்றுமொரு சினிமா சேது . படம் முடிந்து நான் வெளியில் வரும்போது மனதில் மிகப்பெரிய வலி..


5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?



பாபா படத்திற்கு பாம .க வினர் செய்த அட்டூழியங்கள்.. நான் அப்பொழுது சிதம்பரத்தில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன். அங்கு அவர்கள் செய்த அராஜகங்கள் , படத்தை ஓட விடாமல் செய்தது.. அப்பப்பா இன்னும் நினைவில் இருக்கிறது. ( நான் அதிகமாக பார்த்த படங்களில் பாபாவும் ஒன்று ), சிதம்பரத்தில் மட்டும் 48 தடவை பார்த்தேன். இதில் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரையும் கைகாசில் கூட்டி கொண்டு போய் பார்த்தது ஒரு சாதனை ..( இருந்தும் படம் ஓடவில்லை என்பது வேறு விஷயம்)



5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

முதன்முதலில் டி டி எஸ் பற்றி கேள்விபட்டதும் , பிறகு அதை திரை அரங்கினில் பார்த்து உணர்ந்ததும் தான் என்னுடைய தமிழ் சினிமா - தொழில்நுட்ப சம்பவம்..

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

குமுதம்,ஆனந்த விகடன் , சினி பிட்ஸ், வண்ணத்திரை போன்ற சமூக அக்கறையுள்ள புத்தகங்கள் படிப்பேன்.. அதில் வரும் அனைத்து சினிமா பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து வைத்துக்கொண்டு நண்பர்களிடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் சொல்லி கொண்டு திரிவேன்.. இப்போ அதெல்லாம் இல்லை..


7.தமிழ்ச்சினிமா இசை?


ஆல் டைம் பேவரைட் இசைஞானி.. பிறகு ஏ.ஆர் . ரகுமான் மெலோடிக்கள் பிடிக்கும்..

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?



வேறு இந்திய மொழி படங்கள் என்றால், ஹிந்தி படங்கள் பார்ப்பேன்.
உலக மொழி படங்கள என்றால் ரஷ்ய மற்றும் கொரியன் படங்களின் டி வி டிக்கள் இங்கு நிறைய கிடைக்கும்.. அப்போ அப்போ நேரம் கிடைக்கும் பொது பார்ப்பேன்.
அதிகம் தாக்கியது என்றால், BLOOD IN DIAMOND, schindler's list , THE TERMINAL, CAST AWAY, இப்படி சொல்லிகிட்டே போகலாம்..





9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தொடர்ப்பும் இல்லை.. அதனால் அடுத்த
கேள்விக்கு தாவுகிறேன்..

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு நம்ம எதிர்காலமே ஒன்னும் தெரியில இதுல இது வேறயா??



11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

என்னை நீங்கள் கீழ்ப்பாகம் மருத்துவமனையில் பார்க்கலாம்.. அது தான் நடக்கும்..

ஏதோ என்னையும் மதித்து அழைத்த திரு மகேஷ் அவர்களுக்கு நன்றிகள்..
என்னால் முடிந்தவரை எனக்கு மனதில் தோன்றியவற்றை மட்டுமே இங்கு பதிந்துள்ளேன்.

இதுவும் தொடரோட்டம் போல தான். அதனால் நான் அழைக்கும் சிலர்..
( ஏதோ கூப்பிடனும்ன்னு எல்லாம் கூப்புடுல, அதனால ஒழுங்கா இந்த கொக்கிய கன்டினியு பண்ணுங்க, பண்ணல வீட்டுக்கு ஆட்டோ வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்)

நான் அழைப்பது இவர்களை தான்.. ( நாங்க எல்லோரும் ஒரு கூட்டணி , புதிதாக வலை பதிய ஆரம்பித்தவர்கள் ) ( கயல்விழி, விஷ்ணு இதில் சேர்த்தி இலலை. அவங்க எல்லாம் பெரிய ஆளுங்க )


1. அன்பு பதிவர் , சேலத்து சிங்கம் மோகன்
2. அன்பு தம்பி, சுபாஷ் ( எவ்ளோ நேரந்தான் நானும் மாட்டுறது, அதனால இப்போ உன் ட்டர்ன்)
3. அருமை கவிஞர் விஷ்ணு
4. எனக்கு பாராட்டு பத்திரம் வழங்கிய கயல்விழி அவர்கள்
5. காஞ்சி தலைவர் இளைய பல்லவன்

எல்லோரும் மறக்காம பதிவ போட்டுடுங்க அப்படின்னு சொல்லிட்டு இந்த பதிவமுடித்து கொள்கிறேன்..

நன்றி வணக்கம்..

Monday, October 13, 2008

மின்வெட்டு செய்த சதி @ நான் எங்க போய் முட்டிக்க???




நான் எங்க போய் முட்டிக்க??


எல்லோரும் எனக்கு இத்தன ஹிட்ஸ் அத்தன ஹிட்ஸ் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போது நான் மட்டும் சும்மா ஒக்காந்து கன்னி சாரி கணினி திரையை மட்டும் பாத்துகிட்டு இருக்குனுமா அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது, அப்படியே தற்செயலா என்னோட ஹிட்ஸ் என்னடா அப்படின்னு பார்த்த, 5909 ன்னு இருந்துச்சு.. ஆஹா, இன்னிக்கு எப்படியும் 6000 தொட்டுடும் , அதுக்கும் அப்படியே ஒரு பதிவ போட்டுடலாம் அப்படின்னு இருந்தேன்.. ( பதிவு போட எங்க எங்க, எப்படி எப்படி எல்லாம் மேட்டர் புடிக்க நான் கஷ்ட பட வேண்டியதா இருக்கு )







ஒரு சின்ன இடை சொருகல்..

என்னோட ஹிட்ஸ் 5000 தொடும் போது பதிவு போடணும் அப்படின்னு முடிவு எடுத்து இருந்தேன், ஆனால் பாருங்க சில பல காரணங்களளால் என்னால் அப்பழுது பதிவு போட முடியல.. (என்ன காரணமா?? இது தானே வேண்டாங்கிறது.!! ) வேற என்ன தூங்குறது, எந்திருகிறது மறுபடியும் தூங்குறது.. அப்புறம் இன்னொரு விஷயம் சோம்பேறித்தனம் தான், யாரு கை வலிக்க டைப் பண்ணி அப்புறமா பதிவ போட்டு அப்படின்னு நினைச்சிகிட்டு அப்போ அத பதிவு போடுற ஐடியாவ கோட்ட விட்டுட்டேன்..

சரி இப்போ விஷயம் என்னனா??




விதி வலியது அப்படின்னு சும்மாவா சொன்னாங்க பெருசுங்க .. காலையில ஆபீஸ் வந்து மொத வேலையா , அதாவது நமக்கு மொத வேலையே தமிழ்மணம் தொறந்து பாக்குறது தானே, ஓபன் பண்ணி பார்த்தா, பார்த்தா,,, என்னோட பதிவு சூடான இடுகையில் சும்மா உக்காதுக்கினு இருக்கு.. ஆஹா, இன்னிக்கு நம்ம ஹிட்ஸ் எகிறும் அப்படின்னு மனசுல கூவிக்கிட்டு இருக்கும் போது தான் நான் முன்னாடி சொன்ன நம்ம விதி வேலைய காட்டுச்சு..

சரி நம்ம ஹிட்ஸ் போன மாசம் என்ன சொல்லி இருக்கு , பாக்கலாம் அப்படின்னு போனேன், போனேனா, அங்க தான் நம்ம விதி சார் சும்மா கலக்கலா மானாட மயிலாட பாத்தது போல டான்ஸ் ஆடிகிட்டு இருந்தார், நான் பாட்டுக்கு சும்மா இல்லாம, ஹிட்ஸ் கவுன்ட்டர் ( கவுண்டர் இல்லீங்கோ.. நல்ல படிங்க கவுன்ட்டர் ) கலர் சரியா இல்லியே அப்படின்னு சரி நீல கலர் க்கு மாத்தலாம்ன்னு முடிவு பண்ணி ,, சேன்ஜ் ஹிட்ஸ் கவுன்ட்டர் அப்படின்னு எழுதி இருந்த பட்டன தட்டினேன்..


எல்லாம் முடிஞ்சு அப்புறம் அவங்க குடுத்த கோட் எடுத்து பந்தாவா பேஸ்ட் பண்ணி ஓபன் பண்ண இப்போ மொத்த ஹிட்ஸ் 1928 இவ்ளோ தான்னு காட்டுது..






நீங்களே சொல்லுங்க மக்களே, இப்போ நான் என்ன செய்ய?? எங்க போய் முட்டிக்க... இதுக்கு எல்லாம் காரணம் , திரு ஆற்காட்டார் இங்கு நைஜீரியா வில் இல்லாதது தான் காரணம், அவரு மட்டும் இங்கு இருந்திருந்தா, மின்வெட்டு வந்திருக்கும், நானும் அத மாத்தாம இருந்திருப்பேன்.. அதனால எனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு மின்வெட்டு ஏற்படாது தான் காரணம்..இது முழுக்க முழுக்க மின்வெட்டு செய்த சதி தான் என்று நைஜீரியா போலீஸ் எனக்கு ரிப்போர்ட் அனுப்பி இருக்காங்க..

இதுல இன்னொரு கூத்து என்னன்ன, நான் பதிவு எழுத ( சரி சரி கிறுக்க ) வந்து மூணு மாசம் ஆச்சி, இதுல என்னோட சில பதிவுகள் சூடான இடுகையில் இடம் பிடித்து இருந்தது.. அப்போ எல்லாம் நல்ல ஹிட்ஸ் கிடைச்சுது..


ஏதோ இத்தன நாள்களில் ஒரு 5000 பேர் வந்து , நம்ம பக்கத்தை பாத்து இருக்காங்கன்னு நினைச்சிட்டு சந்தோசமா இருந்தா ரீவைன்டு பட்டன் மாதிரி பின்னாடி போய் 1928 க்கு போய் நிக்குது இதுக்கு பேரு என்ன ?

இப்போ என்னடானா, உள்ளதும் போச்சு நொள்ள கண்ணா அப்படிங்குற பழமொழிக்கு ஏற்ப, என்னோட ஹிட்ஸ் எல்லாம் ;போச்சு...

( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

இப்போ சொல்லுங்க நான் எங்க போயி முட்டிக்க..
எதுனா நல்ல இடமா சொல்லுங்க அங்க போய் முட்டிக்கிறேன்..

மனசாட்சி : இது தேவையா, தேவையா, காலையில ஆபீஸ் வந்தோமா, தமிழ்மணம் பார்த்தோமா, பதிவ ஓபன் பண்ணி படிச்சோமா இல்லியான்னு இருக்காம, இத நோண்டுறது, அத நோண்டுறது அப்படின்னு இருந்தா இது தான் நடக்குமாம்..

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.. இல்லைனா ஒரு சின்ன ஸ்மாலுக்கே போதை ஏறி மட்டை ஆன கதை தான்..( என் சோக கதைய கேளு தாய்குலமே...)



டிஸ்கி / பின்குறிப்பு : என்னோட சோகத்துல பங்கேற்க எல்லா குடி மக்கள்களையும் ஊறுகாய் வைத்து கொண்டு அழைக்கிறேன்.. ஏனா, நீங்க தான் பாட்டில் வாங்கி வரணும்..( யோவ் யாருயா அது , நான் எஸ்கேப் அப்படின்னு கத்திகிட்டே ஓடுறது???)


பின்குறிப்புக்கு பின்குறிப்பு : பெருசா பாக்கணும்னா படத்த கிள்ளி பார்த்தோ இல்ல க்ளிக்கி பார்த்தோ பாத்துக்குங்க.. அப்புறம் படம் பெருசா தெரியில அது இதுன்னு சொன்னீங்கன்னா, நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை



பி கு பி கு புக்கு பி குறிப்பு : நான் என்ன தான் சொன்னாலும் எனக்கு 5900 மேல ஹிட்ஸ் வந்துச்சு அப்படின்னு சொன்னாலும் என்னோட நண்பர்கள் சிலர் ( பாதுகாப்பு கருதி அவர்கள் பெயர் வெளியிடவில்லை.. பாதுகாப்பா யாருக்கு/? எனக்கு தான்) நம்பவே மாட்டார்கள். அதனால் இந்த ஸ்க்ரீன் ஷாட்ஸ்.. இல்லைனா நான் எதுக்கு ஸ்க்ரீன் ஷாட்ஸ் போட போறேன்??


பி கு பி க்கு பி க்கு பி க்கு : ( எத்தன?? ) : ப்புறம் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைப்பவர்கள், நினைத்து கொண்டே இருங்கள்.. ஏன் என்றால், தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் உண்டு என்று நான் சொல்லமாட்டேன்.. சம்பந்தம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. என்ன சொல்றது புரிந்து விட்டதா??


வாங்க வந்து என்னோட அழுகையில் கலந்துக் கொள்ளுங்கள்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்











Sunday, October 12, 2008

இனி பொது இடத்தில் புகைபிடித்தால் இப்படி தான் அவதிப்படனும்

இன்னொரு பதிவு ....

இதுவும் என்னுடைய நண்பர் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்.. ( எனக்கு மட்டும் ஏன் இப்படி அனுப்புறாங்கன்னு தெரியில??)


நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..,. இனி மேலும் பொது இடத்தில் புகைபிடிக்கும் முன் யோசியுங்கள்..







இரண்டில் எதில் நன்றாக தெரிகிறதோ, அதில் பார்த்து கொள்ளுங்கள்.. இரண்டும் ஒன்று தான்..





பின் குறிப்பு : நம்ம பத்தியும் நல்ல விதமா, நாலு பேரு படிக்கும் விதமா எழுதிய பதிவர் கயல்விழி அவர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்..








Friday, October 10, 2008

"புகைப்படம் புகட்டுமா நீதி??( வெண்குழல் வத்தி )



என்ன பண்றது , தலைப்பு கூட யாருகிட்டயாவது கடன் தான் வாங்க வேண்டியதா இருக்கு ..


எல்லோரும் இந்த புகைபிடிப்பதை பற்றி பதிவு போட்டு சமுதாய சீர் திருத்தும் செய்யும் பொது நான் மட்டும் சும்மா இருப்பனா?? அதனல நானும் ஒரு பதிவு போட்டுட்டு மத்த வேலை

(
தம் அடிக்குறது இல்ல, இது வேற வேலை) ( நான் ஒரு நாளைக்கு 15 வெண்குழல் வத்தி பிடிப்பேன், இப்போ குறைத்து கொண்டுவருகிறேன்.. )..

இருந்தாலும் ,
எனக்கு இந்த தடை ஒன்றும் செய்யாது , ஏனா நான் தான் இப்போ இந்தியாவில் இல்லியே ..

(
நைஜீரியா பொது இடமா ???, இங்க நான் பிடிச்சா போலீஸ் நான் இந்தியா திரும்ப வரும் போது கேஸ் போடுவாங்களா ??)


அதனால் உங்கள் பார்வைக்கு சில ""புகை ""படங்கள் பார்வைக்கு .. ( இதுவும் - மெயிலில் வந்தவை தான்)

உங்கள் பார்வைக்கு ...

( படங்கள் விரிய சில நேரங்கள் ஆகலாம், பொறுத்து கொள்ளுங்கள் )


( படத்தின் மேல் க்ளிக்கி பெரிதாக பார்த்து கொள்ளவும், அப்படி ஆகவில்லை என்றால் அதற்கும் நான் பொறுப்பாக மாட்டேன் ..)

பாத்துக்கோங்க நீங்க எத்தன வருஷம் உயிரோட இருப்பீங்கன்னு ??


( தற்கொலை செஞ்சுக்க இத விட சுப்பரான வழி இருக்கா என்ன??)


( சவ பெட்டி தான் என்னிக்கும் நிரந்தரம் )

( எதுக்கு இப்படி பீதிய கிளப்புறாங்க??)




( ஒரு நாளைக்கு சராசரியா 438 பேர் இறக்கிறார்கள் ..)




( இதுக்கு விளக்கம் தேவை இல்லை... சீ )))



( சொ செ சூ வெ )

( கடசியா,, என்ன புரியுதா?? )


இனியாவது பாது இருந்துக்கோங்க மக்களே...
புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை என்றாலும் அட்லீஸ்ட்
குறைக்கவாது செய்யுங்கள்..)


( இது கும்மி பதிவு இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்)

மேலும் சில படங்கள் தேவை இல்லை என்று நீங்கள் நினைத்தால் சொல்லுங்கள், எடுத்து விடுகின்றேன் ..

Wednesday, October 1, 2008

பதிவு எழுத ஒரு மேட்டரும் கிடைக்கல ..அதனால தான் இந்த சீரியஸ் பதிவு

வணக்கம் வணக்கம் ..
வணக்கம் சொல்லுங்கப்பா..
இவ்ளோ நாள் கழிச்சி வந்துருக்கோம்ல ..
ஒரு மாலை மரியாதை..
என்னது போதுமா???

சரி சரி பதிவுக்கு வந்துடுறேன்..
போய்டாதீங்க..

இத்தன நாளா எங்க போய்ட்டீங்க அப்படின்னு பல இடத்தில் இருந்து ஒரே போன் கால், மெயில், எப்படி இருக்கீங்கன்னு அப்படின்னு பல பக்கத்தில் இருந்தும் கேட்டார்கள்..
எல்லோருக்கும் ஒரு நன்றி...,, இல்லை இல்லை பல கோடானு கோடி நன்றிகள் ( உன்மையா தானுங்க, சொன்னா நம்புங்க .. என்னையும் மதிச்சு இவ்ளோ நாள் எங்க போய்ட்டீங்கன்னு கேட்டாங்க.. நம்பிடுங்க, இதுக்கு மேல என்னால பொய் சொல்ற மாதிரி நடிக்க முடியாது..))

இத்தன நாளா நான் ஒன்னும் சும்மா இல்ல, அப்போ அப்போ நம்ம நண்பர்கள் என்ன எழுதிருக்காங்கன்னு பாத்துகிட்டு தான் இருந்தேன்.. நான் ஏன் எழுதுலன்னு கேக்குறீங்களா? அது பெரிய கதை.. என்ன கதையா?? இருங்க இருங்க சொல்றேன்.. வேற ஒன்னும் இல்லங்க, எத எழுதுறதுன்னு தெரியல, அப்போ அவ்ளோ விஷயம் இருக்குதான்னு எல்லாம் கேக்காதீங்க, ஒரு விசயமும் இல்லாம, எதை எழுதுறதுன்னு தெரியல்ல..

நானும் குப்புற படுத்தும் பாத்தேன், விட்டத்த வெறிச்சும் பாத்தேன், மூளைய கசக்கி, பிளிஞ்சும் பாத்துட்டேன், ஒன்னும் மேட்டர் கிடைக்கல.. அதனால தான் ஒன்னும் எழுதாம ( எழுத தெரியாம ) அப்படியே இருந்துட்டேன்..

நாம தான் சும்மா இருந்தாலும் நம்ம பாசமுள்ள( கொலைகார ) நண்பர்கள் சும்மா இருக்க விட மாடாங்கள்ள , ஒரே நச்சரிப்பு தான்.. எதுனா கிறுக்குங்க, நாங்க வந்து கும்மி அடிக்கனும்னு சொல்லி தொந்தரவு.. அதனால தான் உங்களுக்கு இந்த கொடுமையே ( பின்ன அவங்க சொல்லலனா நான் எதுக்கு இந்த வெட்டித்தனமா , மொக்கையா பதிவு போட போறேன் சொல்லுங்க)

அதாவது இந்த கொஞ்ச நாளா, நம் அருமை தம்பி சுபாஷ் பதிவுகளை பாத்தேன், அவரு என்னமோ இந்த விண்டோஸ் க்கு நேந்து விட்ட மாதிரி XP ங்குறாரு , விஸ்டா ங்குறாரு, டவுண்கிறேட் , அப்புகிறேட் .. அப்படி இப்படின்னு சும்மா தொழில் நுட்பமா பதிவு போட்டு அவருக்குன்னு ஒரு வட்டத்த , சதுரத்த , முக்கோனத்த எற்படுதிகுட்டு இருக்காரு.. அதுல அவுரோட ஒரு பதிவுக்கு, ஒரு நண்பர் ரொம்ப அக்கறையா, இது போல நல்ல பதிவுகள் மட்டுமே எழுதுங்க, மொக்கை எல்லாம் எழுதாதீங்க அப்படின்னு அட்வைஸ் வேற.. அந்த பின்னூட்டத்த படிச்சுட்டு, ஆஹா, தம்பி இந்த பதிவு உலகத்தில், இன்னொரு படி மேல ஏறி போய்கிட்டு இருக்காருன்னு புரிஞ்சது...
இத எதுக்கு இப்போ சொல்றேன்னு பாக்குறீங்களா? என்ன பண்றது தம்பி மாதிரி எதுனா பதிவு போடலாம்னு நினைச்சி பார்த்தாலே, தூக்கம் தூக்கமா வந்துடுச்சி.. அதனால நீங்க எல்லாம் தப்பிச்சீங்க.. இல்லைனா என்ன நடந்திருக்கும் நினைச்சு பாருங்க..

சரி அவர விடுங்க .. அப்புறம் இன்னொரு நல்ல நண்பர் நம்ம மோகன் இருக்காரே, அதுதாங்க எப்பவும் இந்த கண்ணா பின்னா ன்னு செய்திகள் போட்டு தாக்குவாரே, அவரு மாதிரி நாமளும் எதுனா எழுதலாம்னு நினைச்சேன், நினைச்சதுக்கு அப்புறமா தான் எனக்கு அந்த உண்மையே உறைச்சுது.. அது எழுத கொஞ்சமாவாது மூளை வேணும்னு.. எனக்கு தான் அந்த கண்றாவியே கிடையாதே.. அதனால நான் அந்த முயற்சியையும் கைவிட்டுட்டு வேற எதுனா மேட்டர் கிடைக்குமான்னு யோசிக்க அராம்பிசுட்டேன்.
இதுல பாருங்க, எனக்கு எழுத ஒரு மேட்டரும் கிடைக்கலன்னு இருந்தா இந்த மோகன் இருகாரு பாருங்க அவரு பாட்டுக்கு சும்மா பதிவு மேல பதிவ போட்டு ரணகளம் பண்ணிகிட்டு இருக்காரு, ( எங்க இருந்து தான்யா பதிவு எழுத மேட்டர் புடிக்குறீங்க)

அப்புறம் முக்கியமா நம்ம கவிஞர பத்தி சொல்லியே ஆகணும், கவிஞருக்கு ரெண்டு நாள் லீவு கிடைச்சா போதும் , தொடர்ந்து வரும் சந்திப்பு, நிழலும் நிஜமாகும் அப்படின்னு சும்மா கவிதைகள் எழுதி பதிவுகள் போடுறாரு.. அப்படியும் இல்லைனா தோழிக்கு கடிதம் வேற எழுதுறாரு.. அப்புறம் முக்கியமா சும்மா கவிதைகளை எழுதி இந்த கவிஞர்கள் வட்டத்தை அவரும் கூட்டிட்டு போய்கிட்டே இருக்காரு,.. இப்படி எல்லோரும் அவங்க அவங்க பாதையில எழுதி அவங்களுக்குன்னு ஒரு அடையாளத்த எற்படுதிக்குட்டு சும்மா வரிஞ்சி கட்டி பொளந்து கட்டிகிட்டு இருக்காங்க..

நம்ம தமிழ்அறிஞர் பழமைபேசி அண்ணாத்த, நான் சின்ன வயசுல படிச்ச இலக்கணம் , இலக்கியம், மாத்திரை , டோனிக் அப்படின்னு அவரு பாட்டுக்கு சும்மா ஒரு நாளைக்கு வுட்டா நூறு பதிவு கூட போடுவாரு போல.. சரி அவர மாதிரி எழுதி ஒரு பதிவ போடலாம்னு பாத்தா, எனக்கு தான் சுட்டு போட்டலும், பாம் போட்டாலும் தமிழ் இலக்கணமே தெரியாதே.. அதனால அந்த ஐடியா வும் வீணா போய்ட்டுது..

நம்ம இன்னொரு நண்பர் அது சரி, அவருக்கு அது தான் சரின்னு சரக்க போட்டுட்டு ஒரு நவீன விக்கிரமாதித்தன் கதையா போட்டு பதிவுலகத்தில் புது சர்ச்சைய கிளப்பி விட்டு அமைதியா இருக்காரு.. சரி அவரு மாதிரி சரக்க போட்டு நாமளும் புதுசா நவீன லவா குசா எழுதலாம்னு நினைச்சேன். சரக்க போட்டதுக்கு அப்புறம் என்னத்த எழுதுறது?? ஒரே தூக்கம்மா வந்து தூங்கிட்டேன்.. ( எப்படிங்க சரக்க போட்டு அப்படி ஒரு நவீணத்த எழுதி முடிச்சீங்க??)

அப்புறம் நம்ம குடுகுடுப்பையார், அவரு கட கடன்னு இருபத்தி அஞ்சு பதிவு போட்டு கால் சென்சுரி போட்டுட்டு சும்மா பெரிய போசா குடுக்குறாரு... இங்க எனக்கு ஒரு பதிவுக்கே தாவு கிழிஞ்சி, டவுசர் அவுந்து போங்க சார் என்னத்த சொல்றது...



இந்த மாதிரி எல்லாம் நினைச்சு அப்புறமா யோசிச்சு.. நமக்கு என்ன அடையாளம் அப்படின்னு யோசிச்சு பாத்தா??? அட கர்மமே, ஒன்னிமே இல்ல.. மொக்கை கூட ஒழுங்கா போட தெரியாம, நகைச்சுவை அப்படிங்கற போர்வையுல ஒளிஞ்சுகிட்டு இருக்கேன்ன்னு உண்மை உரைச்சது.. அப்படி உண்மை உறைச்ச நேரத்துல தான் எனக்கு ஒன்னு தெரிஞ்சது அட, இதுவே ஒரு பதிவு போல இருக்கேன்னு போட்டுட்டேன்..
ஐயா மறுபடியும் சொல்றேன், இதுவும் மொக்கை அப்படிங்கற பிரிவுல தான் வரும்.. அதுக்காக கும்மி கொட்டிடாதீங்க..

அப்புறம் டிஸ்க்கி, முன் குறிப்பு பின் குறிப்பு, சைடு குறிப்பு எப்படி வேணும்னாலும் வெச்சுக்கோங்க.. இதுல்ல யாரையாவது தப்பா சொல்லி உங்க மனச புண் படுத்தி இருந்தா சொல்லுங்க, முடிஞ்சா புண் மருந்து வாங்கி அனுப்புறேன்,, அவ்ளோ தான் என்னால முடியும்.. தப்பா இருந்த மன்னிச்சுகோங்க மக்களே.. யாரையாவது விட்டு போயிருந்துச்சுன்னா மன்னிச்சுக்கோங்க..




இடைவெளி அவசியமா??

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...