
மன்னிச்சுடுங்க.. மறுக்கா சொல்றேன், தயவு செய்து மண்ணிச்சுபுடுங்க....
இப்படி எல்லாம் தலைப்பு போட்டாவது, நீங்க யாராச்சும் இந்த பக்கம் எட்டி பாக்குறீங்கலான்னு பாக்கத்தான், வேற ஒன்னும் இல்ல..
சரி வந்தது தான் வந்துட்டீங்க, அப்படியே இதையும் படிச்சுட்டு போய்டுங்க...
(சும்மா போகாதீங்க , எதுனா கருத்து சொல்லிபுட்டு போங்க மக்களே.. )
கேரளா மக்களின் மிக முக்கியப் பண்டிகையான திரு ஓணம் பண்டிகை இன்று அதாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
கேரள மக்களின் வசந்த கால விழாவாக ஓணம் கொண்டாடப்படுகிறது. மாவேலி சக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளாக ஓணம் கருதப்படுகிறது. அன்றைய தினம் பூக்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும். மாவேலி மன்னனை மக்கள் அன்புடன் வரவேற்று உபசரிக்கும் இந்த விழா கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். அதாவது ஆன்மீக வரலாற்றின் அடிப்படையில் மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் துவக்கம் தான் இந்த திரு ஓணம் தினமாகும். தமிழர்களின் பொங்கல் பண்டிகையைப் போன்று இது ஒரு விளைச்சல் திருவிழா என்றும் கூறலாம்.
ஓணம் பண்டிகையன்று அதிகாலையில் கண் விழித்து புத்தாடை அணிந்து திருவாதிரைக் களி செய்து உண்டு, வீட்டு வாயிலில் பூக்களால் கோலமிட்டு, பெண்கள் நடனமாடுவது சிறப்பானது ஆகும்.
ஓணம் என்பது பாத்து நாட்கள் நடக்கும் விசேஷம் ஆகும்.

முதல் நாள் அத்தம் என்று சொல்வார்கள் .,. இன்று தான் பெண்கள் பூக்கோலம் இடுவார்கள் .. கேரளாவில் இதை அத்தபூ என்றும் சொல்வார்கள் .

சித்திரா : இது இரண்டாம் நாள் பண்டிகை. இன்று வயசு பெண்கள் புது புது பூக்களை முதல் நாள் போட்ட பூகோளத்தில் இடுவார்கள்..




த்ரிகேட்ட : (ஆறாம் நாள் )

மூலம் : ( ஏழாம் நாள்)

பூராடம் : (எட்டாம் நாள் ) -- மாவேலி , மகாபலி
உத்திராடம் : ( ஒன்பதாம் நாள் )
திருவோணம் :( கடைசி நாள்)

எல்லாத்துக்கும் ஓணம் நல் வாழ்த்துக்கள்..
( நாங்களும் நல்ல பதிவு போடுவோம்ல)
(இது நல்ல பதிவான்னு நீங்க யாரும் முடிவு எடுக்க வேணாம், நாங்களே எடுதுடுவோம்ல, !!!.. ஏன்னா, உங்களுக்கு எதுக்கு அந்த கஷ்டம்??)
இது நம்ம மலையாள கரையோர பூக்கள்.. சும்மா ஒரு பொழுது போக்குக்கு தான்..

