Thursday, August 14, 2008

கருக்கலைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகேதாவுக்கு இயற்கையாகவே அபார்ஷன்!

டெல்லி: கருத்தடை செய்ய அனுமதிக்க முடியாது என மும்பை உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கபப்ட்ட நிகேதா மேத்தாவுக்கு இயற்கையாகவே அபார்ஷன் ஆகி விட்டது.

ஆகஸ்ட் 12ம் தேதி அவருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டு விட்டதாக அவருடைய கணவர் ஹரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

25 வார கர்ப்பிணியான நிகேதா, தனது வயிற்றில் உள்ளகுழந்தைக்கு இருதய கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், குழந்தை பிறந்தால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதைப் பார்த்து எங்களால் கஷ்டப்பட முடியாது.

கருக்கலைப்பு சட்டப்படி 20 வாரங்களுக்குட்பட்ட கருவைக் கலைக்கவே சட்டத்தில் இடம் உள்ளது. எனவே எனக்கு விதி விலக்கு அளித்து கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், கருக்கலைப்புக்கு அனுமதி தரமறுத்து விட்டது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 12ம் தேதி இரவு நிகேதாவுக்கு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அபார்ஷன் ஆகி விட்டதாம்.

இதுகுறித்து தெரிவித்த ஹரேஷ் மேத்தா, நீதிமன்றம் எங்களுக்கு உதவ மறுத்து விட்டாலும், கடவுள் எங்கள் பக்கம் இருந்துள்ளார். இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

மீடியாக்கள் தேவையே இல்லாமல் எனது மனைவி விவகாரத்தை பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டு விட்டன. இதனால் அவருக்கு மன அழுத்தமும், ரத்தக்கொதிப்பும் அதிகரித்து விட்டது. இதுவே அபார்ஷனுக்கு காரணம் என்றார்.

(நன்றி : தட்ஸ் தமிழ் .காம் )



சரி விசயத்துக்கு வருவோம்,
என்னுடைய கேள்வி எல்லாம், அபார்சன் ஆனால் அவருடைய உயிருக்கேஆபத்து நேரிடலாம் என்ற நிலையில், தற்பொழுது அவருக்கு இயற்கையாகவேஅபார்சன் நடந்து உள்ளதால் (இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ) , நம்முடைய சட்டம் என்ன சொல்ல போகிறது ?
நமது சட்டங்கள் எல்லாம் கருணை அடிப்படையில் உள்ளனவா?
சட்டங்கள் ஏன் வளைந்து கொடுக்க கூடாது..
மேலும் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் வரும் பட்சத்தில், சட்டம் என்னசெய்யும் ?
20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைக்கலாம் என்பது மட்டும் சரியா?
ஏன் நம்முடைய அரசியல் சாசன சட்டங்கள் இவ்வாறு உள்ளது ?
இதற்க்கு என்ன தான் விமோசனம் ??




12 comments:

  1. சட்டம் அனுமதித்திருக்கலாம் என்பதே ஏன் கருத்து. மேலும் 19-20th வீக்'ல ஒரு scan எடுத்து பார்ப்பது வழக்கம். இதை 5th month scan என்று சொல்வார்கள். இந்த scan இந்த குறைபாட்டை தெரிவித்திருக்குமே. அப்போதே கருக்கலைப்பு செய்திருக்கலாமா. இந்த 19-20th week scan செய்வதே இதற்க்காகத்தானே...???

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி
    அவர்கள் செய்ய தவறியதால் தான், இவ்வளவு பிரச்சனை என்றாலும், அந்த குழந்தை என்ன தவறு செய்தது ஐயா??
    இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில், நாளை எந்த நிகழ்வுகள் வேண்டுமென்றாலும் நடக்கலாம் அல்லவா..
    கரு கலைப்பு மட்டும் தீர்வாகி விடுமா?

    ReplyDelete
  3. //கரு கலைப்பு மட்டும் தீர்வாகி விடுமா?//

    சரியான பதில் சொல்ல தெரியவில்லை. ஆனால் அப்படி எதிர்காலத்தில் அந்த பிள்ளையின் குறைபாட்டை நிவர்த்தியாக்க முடியவில்லையெனில் ????????????

    அதன் பெற்றோரின் பாட்டை எப்படி விவரிப்பது? தங்களின் பிள்ளைக்கு எப்போது என்ன நேருமென்பதே தெரியாமல் அவர்கள் வாழ்க்கையே சூகியமாகிவிடும். இந்த செய்தி பிரபல்யமாபிவிட்டதால் அவர்களால் எதுவும் சுயமாக சுதந்தரமாக செய்ய முடியாமல் போகும். இது இவர்களுக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை குடுக்கும். இவர்களுக்கு இந்த குறைபாடுடன் குழந்தை பிறந்தால் அதைப்பாருக்கவென்றே மற்றோரு ஆரோக்கியமான குழந்தை பெற்றேடுப்பதை தவிர்ப்பர். இவர்களின் சந்தோஷம் அவ்வளவுதான்.

    இன்னும் பிறக்காத உயிரைவிட உயிருடனிருப்பவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் கருத்தில் கொண்டாவது கருக்கலைப்பிற்கு ஒத்துழைத்திருக்கலாம்.



    பிள்ளை பிறந்தால், நிச்சயமாக அந்த பிள்ளை தன் நிலை குறித்து அறியவரும்போது மனநிலையில் பெரும் போராட்டமாகவே இருக்கும். வாழ்வே விரக்தியாக இருக்கும். எதிர்காலமே இல்லாதமாதிரி அவர் யோசிக்கலாம்இ இது மனநோயில் கொண்டு போய்விடும்.



    ஆக. அபார்ஷன் பண்ண அனுமதி குடுத்திருக்கலாமென்றே தோன்றுகிறது.

    மற்றயது, இதுபொன்ற செய்திகளை வைத்தியசாலையோ நீதிமன்றங்களோ ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கும்போது கண்டிப்பாக கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும். அல்லது தெரிவிக்காமலே இருப்பது நல்லது.

    இது என் point of view மட்டுமே!!!

    ReplyDelete
  4. ஐயோ!!!
    எழுத்துப்பிழைகளை சரிபார்க்கமுன்னர் அனுப்பிவிட்டேன். மன்னிக்கவும்

    ReplyDelete
  5. நான் மனதில் சொல்ல நினைத்ததை hisubash அவர்கள் சொல்லி விட்டார்கள்.நன்றி.

    ReplyDelete
  6. எல்லா சட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு முக்கிய உதாரணம்.

    அந்தக் குழந்தை குறைபாடுடன் வளர்ந்து பின் இறந்திருந்தால் சட்டத்தால் உயிர் கொடுத்திருக்க முடியுமா? அப்போது அந்தக் குடும்பத்தினரின் படும் கஷ்டத்தை சட்டத்தால் துடைக்க முடியுமா?

    சட்டம் இயற்றப்பட்டதே மக்களின் குறைகளைக் களைவதற்குத்தான்.. இது போன்ற விதிவிலக்குள் ஏற்பட்டால் அதற்கும் வளைந்து கொடுக்கத்தான் வேண்டும். அல்லது சட்ட விதிகளில் இதற்கு இடம் கொடுத்து புதிய சட்டமியற்றப்படுதல் வேண்டும்..

    ReplyDelete
  7. 'உருப்புடாதது அணிமா' பெயரே வித்தியாசமாக உள்ளதே..

    இத்தனை நாட்கள் என் கண்ணில் படவேயில்லை..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. hisubash said...

    //கரு கலைப்பு மட்டும் தீர்வாகி விடுமா?//


    /// இது என் point of view மட்டுமே!!!/////


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..

    ReplyDelete
  9. /// hisubash said...

    ஐயோ!!!
    எழுத்துப்பிழைகளை சரிபார்க்கமுன்னர் அனுப்பிவிட்டேன். மன்னிக்கவும்////

    பரவாயில்லை ...
    உங்கள் கருத்துக்கள் மிகவும் உண்மை தான்.
    நீங்கள் சொல்ல நினைத்ததை நன்றாக புரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  10. /// ஹேமா said...

    நான் மனதில் சொல்ல நினைத்ததை hisubash அவர்கள் சொல்லி விட்டார்கள்.நன்றி.///
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    அப்படியா ??
    உங்கள் இருவரின் மன ஓட்டமும் ஒன்றாக உள்ளது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    /// எல்லா சட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு முக்கிய உதாரணம்.


    சட்டம் இயற்றப்பட்டதே மக்களின் குறைகளைக் களைவதற்குத்தான்.. இது போன்ற விதிவிலக்குள் ஏற்பட்டால் அதற்கும் வளைந்து கொடுக்கத்தான் வேண்டும். அல்லது சட்ட விதிகளில் இதற்கு இடம் கொடுத்து புதிய சட்டமியற்றப்படுதல் வேண்டும்..///

    முதல் வருகைக்கு நன்றி..
    கண்டிப்பாக சட்டங்கள் திருத்தி எழுத பட வேண்டும்..
    இன்னும் காலம் கடத்தி கொண்டிருந்ததால், எப்பொழுது தான் அதை செய்ய போகிறார்களோ ??
    சட்டங்கள் எல்லாம் குற்றவாளிகளுக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க மட்டுமே உதுவுகிறது,,..

    ReplyDelete
  12. //// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    'உருப்புடாதது அணிமா' பெயரே வித்தியாசமாக உள்ளதே..

    இத்தனை நாட்கள் என் கண்ணில் படவேயில்லை..

    வாழ்க வளமுடன்////

    தங்களின் பொன்னான வாழ்த்துக்கு மிக்க நன்றி..
    மற்றவர்களிடம் இருந்து வித்தியாச படுத்தவே இந்த பெயர்

    ReplyDelete

இடைவெளி அவசியமா??

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...