Saturday, December 6, 2008

( மீண்டு வந்த) அணிமா is back ( இது அந்த back இல்லீங்க)

வணக்கம் மக்களே..

எல்லோரும் எப்படி இருக்கீங்க??

உங்கள் பாசத்திற்கு உரிய பாரதி ராஜா இல்லாத காரணத்தினால் நான் வந்திருக்கிறேன் .. ( வந்துடோம்ல)

சௌக்கியமா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..
( பின்ன உன் தொல்ல இல்லாம இவ்ளோ நாள் நல்லா தான் இருந்தோம்னு நீங்க உங்க மனசுல பேசுறது எனக்கு சத்தமா கேக்குது )

அப்புறம் என்னடா ஆள் எங்கியோ எஸ்கேப் ஆயிட்டான்னு நினைச்சிகிட்டு சந்தோசமா இருந்தா, இப்படி வந்து திடீர்னு என்னமோ கேட்டுகிட்டு இருக்கானே அப்படின்னு நீங்க கேக்கலாம். நீங்க கேக்கலைனாலும் நான் அப்படி தான் நினைச்சிக்குவேன்.. வேற வழி..??
என்ன பண்றது ? நம்ம சரி சரி என் நிலைமை அப்படி ஆகி போச்சு..

போன மாசத்துல ஒரு நாள், நான் தான் இந்த கம்பெனில ரொம்ப ஒழுக்கமா, வேலை செய்யுறதா அவங்களே நினைச்சி ( நல்லா நோட் பண்ணிக்குங்க, அவங்க தான் நினைச்சி, நான் அப்படி இல்லை ) நமக்கு இன்னொரு பொறுப்ப குடுத்து கண்ணு போய் அந்த் வேலையை ( ப்ராஜெக்ட் ) முடிச்சிட்டு வந்துடுன்னு சொல்லிட்டு நம்ம கைல குடுத்துடாங்க..

நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.. நான் எல்லாம் வேலை செய்கிற குரூப் கிடையாது, வேலை செய்யுற மாதிரி ஒப்பேத்துற குரூப் அப்படி இப்படின்னு என்ன என்னவோ பிட்ட போட்டு பார்த்தேன்.. உம் வேலைக்கு ஒன்னிம் ஆகல..
சரி கழுதை, நாமளும் ஒரு கை பார்த்துடலாம்னு முடிவு செய்ஞ்சு ஓகே அப்படின்னு சொல்லிட்டேன்..

மக்கா, ஆனா ஒன்னு.. ஓகே சொன்னதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எழவு அது ஒன்னும் அவ்ளோ சுளுவு கிடையாதுன்னு.. சரி நாம தான் எவ்ளோ அடிச்சாலும் சாரி எவ்ளோ கஷ்டம் வந்தாலும் சும்மா எதிர்த்து போராடுவோம்ல, அதே மாதிரி தலை கீழா நின்னு பார்த்து ஒரு வழியா அந்த ப்ராஜெக்ட் முடிச்சி குடுத்துட்டு, ரொம்ப பந்தாவா அவங்க முன்னாடி நின்னேன்..

நம்ம வேல திறமைய பார்த்துட்டு ( சரியா சொல்லனும்னா,திடுக்கிட்டு ) உடனே இன்னொரு ஆபிஸர கூப்ட்டு அப்பா, நாங்க இவர்க்கிட்ட கொடுத்த ப்ராஜெக்ட் இது.. இப்போ நீங்க போயி இதே ப்ராஜெக்ட் செய்ங்க அப்படின்னு சொன்னாரு.. எனக்கு ஒன்னிமே புரியல, என்னடா இது நாம அவங்க குடுத்த வேலைய கரெக்டா முடிச்சிட்டோமே, அப்புறம் எதுக்கு அதே வேலைய இன்னொருதர்க்கிட்ட கொடுத்து செய்ய சொல்றாங்க அப்படின்னு நினைச்சிக்கிட்டு ஏன்? என்னாச்சு? அப்படின்னு கேள்வி மேல கேட்டு அவங்கள கொடஞ்சேன் ..


அதுக்கு அவங்க சொல்றாங்க, ஐயா நீங்க இந்த மாதிரி தான் வேலை செய்வீங்கன்னு எங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா சத்தியமா இந்த ப்ராஜெக்ட் உங்க கிட்ட கொடுத்திருக்க மாடோம்னு சொல்லி ஒ ன்னு அழறாங்க..

சரி நாம தான் ரொம்ப பெருந்தன்மை உள்ளவங்களாச்சே.. அப்புறமா அவங்கள சமாதான படுத்தி , சரி சரி விடுங்க.. நான் தான் முன்னாடியே சொன்னேன்ல, எனக்கு இந்த மாதிரி சின்ன சின்ன ப்ராஜெக்ட் எல்லாம் தராதீங்கன்னு, விடுங்க அடுத்த தடவை வேற ஒரு நல்ல பெரிய ப்ராஜெக்ட் இருந்தா குடுங்க நான் நல்லபடி முடிச்சி தரேன்னு சொன்னது தான் தாமதம் அப்போ டம்முன்னு ஒரு சத்தம்..

என்ன சத்தமா, ?? வேற ஒன்னும் இல்லீங்க.. நாம பெரிய சீனியர் ஆபிசர் மயக்கம் போட்டு உழுந்த சத்தம்னு உங்களுக்கு சொல்லனுமா என்ன??

என்னவோ, எப்படியோ ஒரு வழிய அவங்க கிட்டு இருந்து தப்ப்பிசி, இதோ உங்கள ஒரு வழி பண்ண இப்போ மறுபடியும் அவதாரம் ( இதிக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல) எடுத்து வந்துருக்கேன்..

சோ ( நம்ம so இல்லீங்க இது இங்க்ளிபீசு so ) இனிமேல் வழக்கம் போல என்னுடைய அதிரடி நடவடிக்கைகள் ( என்ன நடவடிக்கையா? அத தெரியாதவங்க தெரிஞ்சவங்க கிட்ட போயி கேட்டுக்கோங்க ) தொடரும்னு சொல்லிட்டு , இதோ இப்போதைக்கு ஜகா வாங்கிட்டு அடுத்த பதிவுல இங்க நைஜீரியாவுல நடந்த விறுவிறுப்பான பதிவர் -வாசகர் சந்திப்பு பற்றி எழுதலாம்னு நினைக்கிறேன்..( பல உண்மைகள் வெளிச்சத்தில் வரும் என்று நினைக்கிறேன் )


மேலும் நான் இல்லாத நாட்களில் , என் மேல் அக்கறை கொண்டு என்னை பற்றி விசாரித்த அனைவருக்கும் நன்றி.. முக்கியம்மா இங்க நைஜீரியாவுல இருக்குற நம்ம வாசக நண்பர் திரு ராகவன் அவர்கள் அடிக்கடி தொல்லை பேசியில் தொல்லை கொண்டு சாரி நலம் விசாரித்தார்.. அவருக்கும் நன்றி ...

அப்புறம் நான் ஏதோ ஊரை விட்டு ஓடி போய் விட்டதாக வதந்தி பரப்பியவர்களை தேடி கொண்டிருக்கிறேன்.. ( கண்டு பிடித்து தருபவர்களுக்கு சென்ற முறை குடுத்த CHIVAS REGAL போலவே இந்த முறை GLENFIDDICH ஒரு புல் அனுப்பி வைக்கப்படும்)

இதுல்ல, நம்ம வருங்கால முதல்வர் என்னை காணவில்லை அப்படின்னு ஒரு பதிவே போட்டு நம்ம மேல இருக்குற பாசத்த காட்டிட்டாரு ( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ், அதுல என் மானத்த வேற கப்பல் ஏத்தி அதுல குளிர் காஞ்சதா நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன )

மறுக்கா சொல்றேன்.. எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி..

அதே வேளையில் இந்த வாரம் நட்சரமாக இருக்கும் அண்ணன் பழமைபேசி அவர்கள்ளுக்கு வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்..

அப்புறம் முக்கியமான விஷயம், மக்களே மேல சொன்ன ( அந்த ப்ராஜெக்ட் கதை ) எதுவும் கண்டிப்பா என்னோட வாழ்கையில் நடந்த சம்பவங்கள் இல்லை அப்படின்னு நான் சொல்லலானாலும் நீங்க நம்பி தான் ஆகணும் .. ஏனா, அது என்னோட கதை அல்ல..

என்னது ? நம்ப மாடீங்களா?? சரி போங்க உங்கள எல்லாம் திருத்தவே முடியாது ..


இப்ப்போதைக்கு வர்ட்டா.... அடுத்த பதிவுல மீட் பண்றேன்..


ஒட்டு போடுங்க அப்படின்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன்.. ஏனா நீங்கபோடுவீங்க அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும் அதே போல தமிழ்மணபட்டையில இருக்குற தம்ஸ் அப்பு குத்துங்க அப்படினும் நான் சொல்லமாட்டேன் ..

112 comments:

pathivu said...
December 6, 2008 4:09 AM

நான் தான் பர்ஸ்ட்-ஆ?

pathivu said...
December 6, 2008 4:10 AM

அடடே, இப்படியே ரெண்டாவது கமெண்டும் போட்டுட்டேனே.

pathivu said...
December 6, 2008 4:10 AM

அட ஆமா, நான் தான் பர்ஸ்ட்!

pathivu said...
December 6, 2008 4:11 AM

இதுக்கு ஒரு வோட் வேற போடனுமா? போடறேன்.

pathivu said...
December 6, 2008 4:12 AM

//நமக்கு இன்னொரு பொறுப்ப குடுத்து கண்ணு போய் அந்த் வேலையை ( ப்ராஜெக்ட் ) முடிச்சிட்டு வந்துடுன்னு சொல்லிட்டு நம்ம கைல குடுத்துடாங்க..//

நைஜீரியால கலவரம்னு கேள்விபட்டேன்!

உருப்புடாதது_அணிமா said...
December 6, 2008 4:19 AM

//pathivu சொன்னது…
நான் தான் பர்ஸ்ட்-ஆ?///

ஆமாம், நீங்க தான் பர்ஸ்ட்

உருப்புடாதது_அணிமா said...
December 6, 2008 4:20 AM

//pathivu சொன்னது…
அட ஆமா, நான் தான் பர்ஸ்ட்!//

ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு ???????

உருப்புடாதது_அணிமா said...
December 6, 2008 4:25 AM

//pathivu சொன்னது…
இதுக்கு ஒரு வோட் வேற போடனுமா? போடறேன்.///

நெம்ப நன்றி

உருப்புடாதது_அணிமா said...
December 6, 2008 4:25 AM

//pathivu சொன்னது…
அடடே, இப்படியே ரெண்டாவது கமெண்டும் போட்டுட்டேனே.///

போடுங்க போடுங்க போட்டுகிட்டே இருங்க

உருப்புடாதது_அணிமா said...
December 6, 2008 4:26 AM

///pathivu சொன்னது…
//நமக்கு இன்னொரு பொறுப்ப குடுத்து கண்ணு போய் அந்த் வேலையை ( ப்ராஜெக்ட் ) முடிச்சிட்டு வந்துடுன்னு சொல்லிட்டு நம்ம கைல குடுத்துடாங்க..//

நைஜீரியால கலவரம்னு கேள்விபட்டேன்!///

யோவ் அதுக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லப்பா

பழமைபேசி said...
December 6, 2008 4:27 AM

வாங்கோ! வாங்கோ!! அவ, அத்து உட்டுட்டாளா என்ன??

உருப்புடாதது_அணிமா said...
December 6, 2008 4:34 AM

//பழமைபேசி சொன்னது…
வாங்கோ! வாங்கோ!! அவ, அத்து உட்டுட்டாளா என்ன??///

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா..
நாங்க தான் அத்து விட்டுட்டோம்

Sriram said...
December 6, 2008 5:22 AM

வணக்கமுங்க ஆஹ்... வணக்கமுங்கோ...
உங்களுக்கு ஏற்ப்பட்ட இந்த சோதனையைக் கண்டு நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

பிரபாகரன் said...
December 6, 2008 5:53 AM

என்ன அணிமா அண்ணே இப்படி பண்ணிடீங்க. உங்கள காணம்னதும் நான் கூட (எனவே எனது பதிவுலகநண்பர்களே, நீங்கள் உண்மையாக யாருக்காவது உதவவேண்டும் என்ற விருப்பம்இருந்தால், பண உதவி செய்ய விருப்பப்பட்டால்உடனே எனது முகவரிக்குபணத்தை அனுப்ப வேண்டுக்கிறேன்,..) collection - ன எடுத்துட்டு எஸ்ஆகிடீங்களோனு நினைச்சேன்.

welcome back

உங்கள மாதிரியே ஒரு பதிவு போட்டிருக்கேன் நல்ல இருக்கானு பார்த்துட்டுசொல்லுங்க.

http://24-7teakadai.blogspot.com/2008/12/blog-post_06.html

தமிழ்ப்பறவை said...
December 6, 2008 6:46 AM

:-)

தங்கராசா ஜீவராஜ் said...
December 6, 2008 7:02 AM

வாங்க அணிமா
வாழ்த்துக்கள் மீண்டு{ம்} வந்ததற்கு....

கபீஷ் said...
December 6, 2008 7:09 AM

Welcome back!
comment in tamil later
Kabheesh

கபீஷ் said...
December 6, 2008 7:10 AM

Welcome back!
comment in tamil later
Kabheesh

நட்புடன் ஜமால் said...
December 6, 2008 6:11 PM

வாங்க வாங்க வாங்க ...

நசரேயன் said...
December 6, 2008 6:26 PM

இவ்வளவு பெரிய கதை இருக்கா

நசரேயன் said...
December 6, 2008 6:28 PM

GLENFIDDICH ஆன்லைன் டெலிவரி இருக்கா ?

இராகவன், நைஜிரியா said...
December 7, 2008 1:22 AM

அணிமா திரும்பி வந்தாச்சு... அப்பாடா இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு... எல்லோரும் என்னை போட்டு குடைஞ்சு எடுத்திடுத்திட்டு இருந்தீங்கில்ல.. இப்போ பாருங்க.. சும்மா ஊர் சுத்திட்டு எவ்வளவு பீலா உட்டுட்டு இருக்காருன்னு...

இராகவன், நைஜிரியா said...
December 7, 2008 1:28 AM

// இதோ இப்போதைக்கு ஜகா வாங்கிட்டு அடுத்த பதிவுல இங்க நைஜீரியாவுல நடந்த விறுவிறுப்பான பதிவர் -வாசகர் சந்திப்பு பற்றி எழுதலாம்னு நினைக்கிறேன்..( பல உண்மைகள் வெளிச்சத்தில் வரும் என்று நினைக்கிறேன் )//

ஆறின கஞ்சி பழங்கஞ்சி சொல்லுவாங்கப்பா...
நாள் கடத்தாம போடுங்கப்பு.. நல்லா கும்மி அடிச்சு ரொம்ப நாளாச்சு..

இராகவன், நைஜிரியா said...
December 7, 2008 1:32 AM

//போன மாசத்துல ஒரு நாள், நான் தான் இந்த கம்பெனில ரொம்ப ஒழுக்கமா, வேலை செய்யுறதா அவங்களே நினைச்சி ( நல்லா நோட் பண்ணிக்குங்க, அவங்க தான் நினைச்சி, நான் அப்படி இல்லை ) நமக்கு இன்னொரு பொறுப்ப குடுத்து கண்ணு போய் அந்த் வேலையை ( ப்ராஜெக்ட் ) முடிச்சிட்டு வந்துடுன்னு சொல்லிட்டு நம்ம கைல குடுத்துடாங்க..//
இப்படியெல்லாம் பொய் சொல்ல யார் கத்து கொடுத்தாங்க..

இராகவன், நைஜிரியா said...
December 7, 2008 1:36 AM

// இதுல்ல, நம்ம வருங்கால முதல்வர் என்னை காணவில்லை அப்படின்னு ஒரு பதிவே போட்டு நம்ம மேல இருக்குற பாசத்த காட்டிட்டாரு ( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ், அதுல என் மானத்த வேற கப்பல் ஏத்தி அதுல குளிர் காஞ்சதா நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ) //

மானம் அப்படின்னு நமக்கு எதாவது இருக்கின்றதா என்ன..

MayVee said...
December 7, 2008 2:09 AM

"நான் தான் இந்த கம்பெனில ரொம்ப ஒழுக்கமா, வேலை செய்யுறதா அவங்களே நினைச்சி ( நல்லா நோட் பண்ணிக்குங்க, அவங்க தான் நினைச்சி, நான் அப்படி இல்லை )"

he he he

RAMYA said...
December 7, 2008 4:14 AM

மீண்டும் வந்து இந்த ஜோதிலே ஐக்கியம் ஆனதிற்கு நன்றி nanri
நிசமாலுமா அந்த ப்ராஜெக்ட் நீங்க வாங்கி செய்யலை? பொய் பேசக்கூடாது
ஆமா சொல்லிபிட்டேன்...

ilayapallavan said...
December 7, 2008 5:25 AM

ஆஹா வந்துட்டீங்களா?

வாங்க வாங்க.

(வேறென்னத்த சொல்ல?)

பழையசோறு said...
December 7, 2008 6:30 AM

Welcome back Anima... I will call you by this week one of the day..

அது சரி said...
December 7, 2008 8:24 AM

சோமாலியாவுல எங்க இருந்தீங்க? அங்க இட்லி தோசை கொடைச்சிதா?

Subash said...
December 7, 2008 8:49 AM

vanthuteengalaaaaa?

nanum sekirma vanthuduveen.

apa vachukareen kacheriyaaa

உருப்புடாதது_அணிமா said...
December 7, 2008 9:05 AM

/////Sriram சொன்னது…
வணக்கமுங்க ஆஹ்... வணக்கமுங்கோ...
உங்களுக்கு ஏற்ப்பட்ட இந்த சோதனையைக் கண்டு நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.///


நெசமாத்தான் சொல்றீகளா??
இல்ல இந்த பின்னூட்டம் இந்த பதிவுக்கு தானா??

உருப்புடாதது_அணிமா said...
December 7, 2008 11:42 AM

///பிரபாகரன் சொன்னது…
என்ன அணிமா அண்ணே இப்படி பண்ணிடீங்க. உங்கள காணம்னதும் நான் கூட ( collection - ன எடுத்துட்டு எஸ்ஆகிடீங்களோனு நினைச்சேன்.

welcome back

உங்கள மாதிரியே ஒரு பதிவு போட்டிருக்கேன் நல்ல இருக்கானு பார்த்துட்டுசொல்லுங்க.

http://24-7teakadai.blogspot.com/2008/12/blog-post_06.html////

என்னை போயி அப்படி எல்லாம் தப்பா நினைக்கலாமா?
நான் எவ்ளோ நல்லவன் தெரியுமா??
பதிவ பார்த்தேன்.. கமெண்ட் இட்டுள்ளேன்

உருப்புடாதது_அணிமா said...
December 7, 2008 12:02 PM

//தமிழ்ப்பறவை சொன்னது…

/
:-)////

என்னது ஒரு சிரிப்பானையுடன் போய்ட்டீங்க??

உருப்புடாதது_அணிமா said...
December 7, 2008 12:03 PM

//தங்கராசா ஜீவராஜ் சொன்னது…
வாங்க அணிமா
வாழ்த்துக்கள் மீண்டு{ம்} வந்ததற்கு..../////


ரொம்ப நன்றிங்க/. உங்கள மாதிரி நாலு நல்லவங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலை ??

Poornima Saravana kumar said...
December 7, 2008 6:40 PM

:)))

Poornima Saravana kumar said...
December 7, 2008 6:48 PM

//சௌக்கியமா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..
( பின்ன உன் தொல்ல இல்லாம இவ்ளோ நாள் நல்லா தான் இருந்தோம்னு நீங்க உங்க மனசுல பேசுறது எனக்கு சத்தமா கேக்குது )
//

அச்சோ அப்டி இல்லீங்கோ.. மனசுல சொல்லலை வாயாலையும் சொல்லலைனு சொல்ல ஆசை தான், ஆனா நாங்க பொய் சொல்றத பிறந்த போதே விட்டுடோம்.. க்க்க்ம்ம்ம் ..

குடுகுடுப்பை said...
December 7, 2008 6:55 PM

இதுல்ல, நம்ம வருங்கால முதல்வர் என்னை காணவில்லை அப்படின்னு ஒரு பதிவே போட்டு நம்ம மேல இருக்குற பாசத்த காட்டிட்டாரு ( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ், அதுல என் மானத்த வேற கப்பல் ஏத்தி அதுல குளிர் காஞ்சதா நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன )

வாங்கண்ணே, உங்கள காணோம்னு தவிச்சு போயிட்டோம். அடைப்புக்குறில கப்பல் ஏத்தினாதா போட்டிருக்கு அது விமானம் மற்றபடி எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிப்போம்.(நமக்கு கூட எதிரி இருக்காங்கப்பா)

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 12:25 AM

//கபீஷ் சொன்னது…
Welcome back!
comment in tamil later
Kabheesh///


நீங்க நம்ம பக்கம் வந்ததே பெருசுங்கன்னா..
மீண்டும் வருவீங்கன்னு நினைக்கிறேன்??

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 12:31 AM

//அதிரை ஜமால் சொன்னது…
வாங்க வாங்க வாங்க ...////

வந்துட்டேன் , வந்துட்டேன், வந்துட்டேன் ...

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 12:42 AM

///நசரேயன் சொன்னது…


இவ்வளவு பெரிய கதை இருக்கா///

ஒ.. இது கதை தான் அப்படின்னு கண்டுபிடிச்சிட்டீங்களா??
இது என் கதை இல்லீங்கண்ணா ??

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 12:47 AM

///இராகவன், நைஜிரியா சொன்னது…
அணிமா திரும்பி வந்தாச்சு... அப்பாடா இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு... எல்லோரும் என்னை போட்டு குடைஞ்சு எடுத்திடுத்திட்டு இருந்தீங்கில்ல.. இப்போ பாருங்க.. சும்மா ஊர் சுத்திட்டு எவ்வளவு பீலா உட்டுட்டு இருக்காருன்னு...////


என்னது சும்மா ஊர் சுத்திக்கிட்டு இருந்தனா?? என்னங்கண்ணா இப்படி நாக்குல எதையோ போட்டு பேசுற மாதிரி பேசுறீங்க?? நான் எல்லாம் எவ்ளோ நல்லவன் தெரியும்களா??

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 12:47 AM

///நசரேயன் சொன்னது…
GLENFIDDICH ஆன்லைன் டெலிவரி இருக்கா ?//


சாரி ..
offline டெலிவரி க்கு வேணா ட்ரை பண்ணட்டுமா ??

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 1:01 AM

//இராகவன், நைஜிரியா சொன்னது
ஆறின கஞ்சி பழங்கஞ்சி சொல்லுவாங்கப்பா...
நாள் கடத்தாம போடுங்கப்பு.. நல்லா கும்மி அடிச்சு ரொம்ப நாளாச்சு..///


ஆறின கஞ்சியையும் நாங்க சூடா போடுவோம்.. கவலைய விடுங்க.. போட்டுட்டா போச்சு..
அப்புறம் அந்த ரகசியத்த சொல்லட்டுமா ? வேண்டாமா??

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 1:02 AM

///இராகவன், நைஜிரியா சொன்னது…
இப்படியெல்லாம் பொய் சொல்ல யார் கத்து கொடுத்தாங்க..///

எங்க கம்பெனில தான் கத்து கொடுத்தாங்க.. நான் என்ன பண்ணட்டும் ??

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 1:03 AM

///இராகவன், நைஜிரியா சொன்னது…
மானம் அப்படின்னு நமக்கு எதாவது இருக்கின்றதா என்ன..
December 07, 2008 10:36 AM ////

என்ன அப்படி கேட்டு புட்டிடீங்க?? நாங்க எல்லாம் மானம் மருவாதி இது எல்லாம் கொஞ்சூண்டு அதிகமா உள்ளவங்க.. நம்மள நாமலே குறைச்சி எடை போடலாமா??

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 1:04 AM

///MayVee சொன்னது…
"நான் தான் இந்த கம்பெனில ரொம்ப ஒழுக்கமா, வேலை செய்யுறதா அவங்களே நினைச்சி ( நல்லா நோட் பண்ணிக்குங்க, அவங்க தான் நினைச்சி, நான் அப்படி இல்லை )"

he he he////


ஹா ஹா ஹா ..

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 1:06 AM

///RAMYA சொன்னது…
மீண்டும் வந்து இந்த ஜோதிலே ஐக்கியம் ஆனதிற்கு நன்றி nanri
நிசமாலுமா அந்த ப்ராஜெக்ட் நீங்க வாங்கி செய்யலை? பொய் பேசக்கூடாது
ஆமா சொல்லிபிட்டேன்...////

இப்பவே சொல்லிட்டேன் கம்பெனி secreta வெளியில சொல்லாதீங்க.. அப்புறம் அழுதுடுவேன்..

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 1:07 AM

///ilayapallavan சொன்னது…
ஆஹா வந்துட்டீங்களா?
வாங்க வாங்க.
(வேறென்னத்த சொல்ல?)////


நன்றி வருகைக்கு,...
( நானும் வேற என்னாத சொல்ல?? )

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 1:11 AM

//பழைய சோறு சொன்னது…


Welcome back Anima... I will call you by this week one of the day..////



வருக்கைக்கு நன்றி

Call me at anytime..

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 1:13 AM

///அது சரி சொன்னது…


சோமாலியாவுல எங்க இருந்தீங்க? அங்க இட்லி தோசை கொடைச்சிதா?////


யோவ் அது யாருயா?? அங்க புரளிய கிளப்பி விடுறது ??
என்ன அண்ணான் உலக சுற்றுபயணம் போயிட்டு இப்போ தான் வந்துருக்காரு.. அவுர போயி இப்படி??? எடுடா அந்த ak 47
( அணிமாவின் அல்லக்கை )

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 1:14 AM

///Subash சொன்னது…


vanthuteengalaaaaa?

nanum sekirma vanthuduveen.

apa vachukareen kacheriyaaa////


அருமை தம்பியே..
சீக்கிரம் வா..
அன்போடு அழைக்கின்றது நம் கும்மி படை..
வீறு கொண்டு வா..

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 1:19 AM

///PoornimaSaran சொன்னது…

அச்சோ அப்டி இல்லீங்கோ.. மனசுல சொல்லலை வாயாலையும் சொல்லலைனு சொல்ல ஆசை தான், ஆனா நாங்க பொய் சொல்றத பிறந்த போதே விட்டுடோம்.. க்க்க்ம்ம்ம் ..////



நீங்க எங்கள விட ரொம்ப நல்லவங்கள இருப்பீங்க போல இருக்கே..
என்னை விட நீங்க அழகா பொய் சாரி உண்மை சொல்றீங்க..
வந்து எங்க ஜோதில கலந்துக்கோங்க ..

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 1:19 AM

///PoornimaSaran சொன்னது…


:)))
/////

மொத வருக்கைக்கு நன்றிங்க

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 1:23 AM

///குடுகுடுப்பை சொன்னது…
வாங்கண்ணே, உங்கள காணோம்னு தவிச்சு போயிட்டோம். அடைப்புக்குறில கப்பல் ஏத்தினாதா போட்டிருக்கு அது விமானம் மற்றபடி எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிப்போம்.(நமக்கு கூட எதிரி இருக்காங்கப்பா)///


வாங்க கு கு.. உங்க குசும்புக்கு அளவே இல்லாம போச்சு..
உங்கள நான் என்கூட கூட்டிகிட்டு போகலன்னு நீங்க இப்படி காத்து மூக்கு வாயி அப்படி இப்பன்னினு போட்டு குடுத்து ரொம்ப நல்லா வாழ்ந்துட்டீங்க..
இனி அத்து நடக்காது என்பதை குறைந்த வெறியுடன் சொல்லி கொள்கிறேன்..

இனி நான் தான் உங்களுக்கு எதிரி ..

ஹ ஹா ஹாஆஆஆஆஆஆஆ

இராகவன், நைஜிரியா said...
December 8, 2008 1:48 AM

//ஆறின கஞ்சியையும் நாங்க சூடா போடுவோம்.. கவலைய விடுங்க.. போட்டுட்டா போச்சு..
அப்புறம் அந்த ரகசியத்த சொல்லட்டுமா ? வேண்டாமா??//

சும்மா பிலிம் (படம்) காண்பிச்சுட்டு இருக்ககூடாது.. நல்லா கும்மி அடிச்சு ரொம்ப நாளாச்சுன்னு பின்னூட்டம் போட்டேன்.. இனியும் காலம் தாழ்த்துவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

இராகவன், நைஜிரியா said...
December 8, 2008 1:51 AM

//வாங்க கு கு.. உங்க குசும்புக்கு அளவே இல்லாம போச்சு..
உங்கள நான் என்கூட கூட்டிகிட்டு போகலன்னு நீங்க இப்படி காத்து மூக்கு வாயி அப்படி இப்பன்னினு போட்டு குடுத்து ரொம்ப நல்லா வாழ்ந்துட்டீங்க..
இனி அத்து நடக்காது என்பதை குறைந்த வெறியுடன் சொல்லி கொள்கிறேன்..

இனி நான் தான் உங்களுக்கு எதிரி .. //

அனாவசியமா வம்பிழுக்கின்றாய் என நினைக்கின்றேன்.. வேண்டம்பா.. குடுகுடுப்பைக்கிட்ட வம்பு எதுவும் வச்சுக்காதே.. அவருக்கு பின்னாடி, வருங்கால முதல்வர் இருக்காரு, கொ.ப.செ ரம்யா சகோதரி இருக்காங்க... அப்புறமா உன் பேர வச்சு கதை எழுத ஆரம்பிச்சுடுவாங்க... உன் பக்கத்தில நான் மட்டும் தான் இருக்கேன் அதையும் புரிஞ்சுக்க...

கபீஷ் said...
December 8, 2008 2:15 AM

//உன் பக்கத்தில நான் மட்டும் தான் இருக்கேன் அதையும் புரிஞ்சுக்க...//

அணிமாக்கு நிபந்தனையில்லாத சப்போர்ட் பண்ண நானும் இருக்கேன்.(உருப்படாததுன்னு சுருக்கமா நம்ம நண்பனை கூப்பிட மனசு வரல்ல)

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 4:42 AM

///ஹேமா என்பவர் ஒரு வலைப்பதிவுக்கான இணைப்பை அனுப்பியுள்ளார்:

உருப்படாத(வன்)து, வந்தாச்சா...வாங்க.இனி யாருக்கு எங்க உதவி செய்யணும்.சொல்லுங்க.////


நான் ஒரு சமூக சேவகன் என்பதை இந்த உலகத்திற்கு உரக்க கூவிய ஹேமா அவர்களுக்கு மிக்க நன்றி..

( எல்லாரும் நோட் பண்ணிக்கோங்கப்பா )

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 4:45 AM

///இராகவன், நைஜிரியா சொன்னது…

சும்மா பிலிம் (படம்) காண்பிச்சுட்டு இருக்ககூடாது.. நல்லா கும்மி அடிச்சு ரொம்ப நாளாச்சுன்னு பின்னூட்டம் போட்டேன்.. இனியும் காலம் தாழ்த்துவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
////


மறுபடியும் சொல்றேன்...
நம்ம கம்பெனி secreta வெளியில சொல்லாதீங்க..
அப்புறம் இந்த பிலிம் காட்ரதுன்ன என்னங்கண்ணா? அத கொஞ்சம் நமக்கும் சொல்லி தந்தீங்கன்னா , ரொம்ப நல்லா இருக்கும்..
ஹி ஹி ஹி

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 4:48 AM

////இராகவன், நைஜிரியா சொன்னது…
அனாவசியமா வம்பிழுக்கின்றாய் என நினைக்கின்றேன்.. வேண்டம்பா.. குடுகுடுப்பைக்கிட்ட வம்பு எதுவும் வச்சுக்காதே.. அவருக்கு பின்னாடி, வருங்கால முதல்வர் இருக்காரு, கொ.ப.செ ரம்யா சகோதரி இருக்காங்க... அப்புறமா உன் பேர வச்சு கதை எழுத ஆரம்பிச்சுடுவாங்க... உன் பக்கத்தில நான் மட்டும் தான் இருக்கேன் அதையும் புரிஞ்சுக்க..////

அண்ணே.. நம்ம குகு, வருங்கால முதல்வர்ன்ன, நானும் வ.மு தான்.. அப்புறம் நீங்களும் நானும் சேர்ந்தா பட்டைய கிளப்பிட மாட்டோம்?? பயப்படாதீங்க, யாரு வந்தாலும் நாம ஒரு கை பார்த்திடுவோம்.. ( ரம்யா அவர்களே, இது சாதா படை கிடையாது, பெரும் சொறி சாரி பெரும் படை )

உருப்புடாதது_அணிமா said...
December 8, 2008 4:51 AM

///கபீஷ் சொன்னது…
அணிமாக்கு நிபந்தனையில்லாத சப்போர்ட் பண்ண நானும் இருக்கேன்.(உருப்படாததுன்னு சுருக்கமா நம்ம நண்பனை கூப்பிட மனசு வரல்ல)///

அட நமக்க சப்போர்ட் மிக அதிகமா இருக்கும் போல ( யாரங்கே, பாருங்க எங்க படைய.. )
மிக்க நன்றி கபீஷ் அவர்களே ..

தாரளமா கூப்டுங்க.. நாமே எல்லாம் என்னிக்கி உருப்புட்டு இருக்கோம்?? அதனால தயங்காம உருப்புடாதவன்ன்னு கூப்டுங்க..

இராகவன், நைஜீரியா said...
December 8, 2008 5:23 AM

//அண்ணே.. நம்ம குகு, வருங்கால முதல்வர்ன்ன, நானும் வ.மு தான்.. அப்புறம் நீங்களும் நானும் சேர்ந்தா பட்டைய கிளப்பிட மாட்டோம்?? பயப்படாதீங்க, யாரு வந்தாலும் நாம ஒரு கை பார்த்திடுவோம்.. ( ரம்யா அவர்களே, இது சாதா படை கிடையாது, பெரும் சொறி சாரி பெரும் படை )//

பார்த்துப்பா.. பெரும் படை அப்படின்னு சொல்லிபிட்டு யாரவது ஜாலிம்லோஷன் அனுப்பிச்சிட போறாங்க..

இராகவன், நைஜிரியா said...
December 8, 2008 5:25 AM

//அப்புறம் இந்த பிலிம் காட்ரதுன்ன என்னங்கண்ணா? அத கொஞ்சம் நமக்கும் சொல்லி தந்தீங்கன்னா , ரொம்ப நல்லா இருக்கும்..
ஹி ஹி ஹி//

பிலிம் காட்றது தெரியாது... இப்போ நீங்க காண்பிச்சுட்டு இருக்கிறதுதான் பிலிம்...

குடுகுடுப்பை said...
December 8, 2008 3:01 PM

அண்ணே.. நம்ம குகு, வருங்கால முதல்வர்ன்ன, நானும் வ.மு தான்.. அப்புறம் நீங்களும் நானும் சேர்ந்தா பட்டைய கிளப்பிட மாட்டோம்?? பயப்படாதீங்க, யாரு வந்தாலும் நாம ஒரு கை பார்த்திடுவோம்.. ( ரம்யா அவர்களே, இது சாதா படை கிடையாது, பெரும் சொறி சாரி பெரும் படை )

//

வந்து திருச்சி பதிவ ஆரம்பிச்சு வைங்கண்ணே. அப்ப்டியே நம்ம கடை பக்கமும் வாங்க, ரொம்ப காத்து வாங்குது.

பழமைபேசி said...
December 8, 2008 3:11 PM

அப்பாட, எல்லா வேலையும் இப்பத்தான் முடிஞ்சது. சரி, மலைக்கோட்டையார் கோட்டைல என்ன நடக்குது?

பழமைபேசி said...
December 8, 2008 3:12 PM

ஓ, நமக்கு வாழ்த்தெல்லாம் சொல்லி இருக்கீங்ளா....நான் பதிவே இன்னைக்குதான் படிக்கிறேன்....நன்றி! சரி, வாசகர் சந்திப்புல நடந்ததை சீக்கிரம் சொல்லுங்க....

பழமைபேசி said...
December 8, 2008 3:15 PM

திருச்சியப் பத்தி எழுதப் போறீங்களாமே? அந்த முக்கொம்புல நீங்க அடி வாங்கினத மட்டும் எழுதிடாதீங்க... எதுக்கு நாலு பேருக்கு, இந்த மாதிரி பொது இடத்துல சொல்லிகிட்டு? நல்லாவா இருக்கு?? என்ன நாஞ்சொல்லுறது???

thevanmayam said...
December 9, 2008 6:19 AM

நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.. நான் எல்லாம் வேலை செய்கிற குரூப் கிடையாது, வேலை செய்யுற மாதிரி ஒப்பேத்துற குரூப்
பரவால்லையே நானும்
உங்க க்ருப்தான்!!!

Poornima Saravana kumar said...
December 9, 2008 6:24 AM

//உருப்புடாதது_அணிமா சொன்னது…


///PoornimaSaran சொன்னது…

அச்சோ அப்டி இல்லீங்கோ.. மனசுல சொல்லலை வாயாலையும் சொல்லலைனு சொல்ல ஆசை தான், ஆனா நாங்க பொய் சொல்றத பிறந்த போதே விட்டுடோம்.. க்க்க்ம்ம்ம் ..////



நீங்க எங்கள விட ரொம்ப நல்லவங்கள இருப்பீங்க போல இருக்கே..
என்னை விட நீங்க அழகா பொய் சாரி உண்மை சொல்றீங்க..
வந்து எங்க ஜோதில கலந்துக்கோங்க ..

//

எந்த ஜோதி!!!!!!!!!!!!????????????

Poornima Saravana kumar said...
December 9, 2008 6:30 AM

இது இராகவன்ஜி என் ப்ளாக்ல சொன்னது..

// இராகவன், நைஜிரியா said...
உரும்ப்பிடாது அணிமா அவர்கள், தமிலிழில் இந்த வலைப்பதிவை இட்டுள்ளார். அதை பார்த்துதான் இங்கு வந்தேன்... நன்றி உருப்பிடாதது அணிமா ...

//

ரொம்ப நன்றி அணிமா:))))))

ராஜ நடராஜன் said...
December 9, 2008 7:04 AM

வாங்க!நமக்கு எஸ் சொல்றது தஸ்,புஸ்செல்லாம் பிடிக்காத விசயங்கள்.வந்தமா,பந்தில உட்கார்ந்தமா,முய் பேரு பின்னூட்டத்துல இருக்குதான்னு பார்க்கிறதோட சரி.இருந்தாலும் நீங்க சொன்னீங்கன்னு ஒரு ஓட்டுப் போடறேன்.

இராகவன், நைஜிரியா said...
December 9, 2008 8:37 AM

// PoornimaSaran சொன்னது…

எந்த ஜோதி!!!!!!!!!!!!???????????? //

அய்ய... இந்த மாதிரி மொக்க கேள்வியெல்லாமா கேட்ப்பங்க...

கும்மி ஜோதிதான் எங்க ஜோதி... யாரவது கிடைக்க மாட்டாங்களான் பார்த்துட்டு இருக்கோம்.. வந்தா சும்மா கும்மு, கும்முன்னு கும்மிட மாட்டோம்...

உருப்புடாதது_அணிமா said...
December 9, 2008 2:54 PM

நானே 75
எப்படி ??

உருப்புடாதது_அணிமா said...
December 9, 2008 3:02 PM

///இராகவன், நைஜீரியா சொன்னது…
பார்த்துப்பா.. பெரும் படை அப்படின்னு சொல்லிபிட்டு யாரவது ஜாலிம்லோஷன் அனுப்பிச்சிட போறாங்க..///

ஆமாம்? அந்த மருந்து எதுக்கு ?? உங்களுக்கு எதுனா ப்ரோப்லேம் இருக்கா??

உருப்புடாதது_அணிமா said...
December 9, 2008 3:05 PM

///இராகவன், நைஜிரியா சொன்னது
பிலிம் காட்றது தெரியாது... இப்போ நீங்க காண்பிச்சுட்டு இருக்கிறதுதான் பிலிம்...///

ஒ.. இதுக்கு பேரு தான் பிலிமா?? சொல்லவே இல்ல??
ஆனாலும் சொல்றேன்.. இது அந்த பிலிம் கிடையாதுன்னே

உருப்புடாதது_அணிமா said...
December 9, 2008 3:09 PM

//# குடுகுடுப்பை சொன்னது…
வந்து திருச்சி பதிவ ஆரம்பிச்சு வைங்கண்ணே. அப்ப்டியே நம்ம கடை பக்கமும் வாங்க, ரொம்ப காத்து வாங்குது.///

அண்ணே திருச்சி பத்தி எழுத, அந்தளவுக்கு நமக்கு அறிவு கிடையாதுன்னே..
கண்டிப்பா அடுத்த பதிவு உங்க பக்கத்துக்கு தானே ..
கோவிக்காதீங்க.. (ஒன்னுமே தெரியில, என்ன எழுதுரதுன்னும் புரியில)

உருப்புடாதது_அணிமா said...
December 9, 2008 3:13 PM

///பழமைபேசி சொன்னது…


அப்பாட, எல்லா வேலையும் இப்பத்தான் முடிஞ்சது. சரி, மலைக்கோட்டையார் கோட்டைல என்ன நடக்குது?///


ஆமா, நட்சத்திரம் இந்த பக்கம் வந்தது எங்களுக்கு எல்லாம் மிக்க சந்தோசம்..
இந்த பக்கம் மொக்கைய தவிர வேற என்னத்த நீங்க எதிர் [பார்க்க முடியும்??

உருப்புடாதது_அணிமா said...
December 9, 2008 3:16 PM

///பழமைபேசி சொன்னது…
ஓ, நமக்கு வாழ்த்தெல்லாம் சொல்லி இருக்கீங்ளா....நான் பதிவே இன்னைக்குதான் படிக்கிறேன்....நன்றி! சரி, வாசகர் சந்திப்புல நடந்ததை சீக்கிரம் சொல்லுங்க....//

அத சொல்லாம எங்க போயிட போறோம்??
அப்புறம் உங்க அனுபவத்த ( நட்சத்திர) சொல்லுங்கள்

உருப்புடாதது_அணிமா said...
December 9, 2008 3:20 PM

///பழமைபேசி சொன்னது…
திருச்சியப் பத்தி எழுதப் போறீங்களாமே? அந்த முக்கொம்புல நீங்க அடி வாங்கினத மட்டும் எழுதிடாதீங்க... எதுக்கு நாலு பேருக்கு, இந்த மாதிரி பொது இடத்துல சொல்லிகிட்டு? நல்லாவா இருக்கு?? என்ன நாஞ்சொல்லுறது???///

என்னாது?? முக்கொம்பா? நான் எப்போ அடி வாங்கினேன் ??
ஒ?? அத பத்தி சொல்றீங்களா? அது எல்லாம் அடிக்கு சமம் ஆகாதுங்க.. அது எல்லா சும்மா பாசமா தட்டுனத போயி இப்படி ஊரு முழுக்க சொல்றீங்களே இது நியாயமா?

உருப்புடாதது_அணிமா said...
December 9, 2008 3:22 PM

///thevanmayam சொன்னது…
நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.. நான் எல்லாம் வேலை செய்கிற குரூப் கிடையாது, வேலை செய்யுற மாதிரி ஒப்பேத்துற குரூப்
பரவால்லையே நானும்
உங்க க்ருப்தான்!!!///

வாங்க நம்ம குரூப் பெரிய blood குரூபா இருக்கும் போல..
வந்தமைக்கு மிக்க நன்றி

உருப்புடாதது_அணிமா said...
December 9, 2008 3:28 PM

///PoornimaSaran சொன்னது…//
எந்த ஜோதி!!!!!!!!!!!!????????????///

நீங்க இவ்ளோ அப்பாவியா? சொல்லவே இல்ல??
எதுக்கும் நம்ம href="http://ramya-willtolive.blogspot.com/">will to live ரம்யாகிட்ட கேட்டு பாருங்க விடை கிடைக்கும் ...

உருப்புடாதது_அணிமா said...
December 9, 2008 3:31 PM

////PoornimaSaran சொன்னது…


இது இராகவன்ஜி என் ப்ளாக்ல சொன்னது..

// இராகவன், நைஜிரியா said...
உரும்ப்பிடாது அணிமா அவர்கள், தமிலிழில் இந்த வலைப்பதிவை இட்டுள்ளார். அதை பார்த்துதான் இங்கு வந்தேன்... நன்றி உருப்பிடாதது அணிமா ...

//

ரொம்ப நன்றி அணிமா:))))))/////


வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க..

அப்புறம் மன்னிச்சிக்கோங்க, நான் ஒட்டு போட தான் தமிழிஷ் பட்டோன அமுக்கினேன்,, அப்புறம் தான் தெரிஞ்சந்து , நீங்க அந்த பதிவ தமிழிஷில் இணைக்க வில்லை என்று., அதனால் என்னுடைய profilela உங்கள் பதிவை இணைத்து விட்டேன்.. மன்னித்து கொள்ளுங்கள்

உருப்புடாதது_அணிமா said...
December 9, 2008 3:33 PM

///ராஜ நடராஜன் சொன்னது…
வாங்க!நமக்கு எஸ் சொல்றது தஸ்,புஸ்செல்லாம் பிடிக்காத விசயங்கள்.வந்தமா,பந்தில உட்கார்ந்தமா,முய் பேரு பின்னூட்டத்துல இருக்குதான்னு பார்க்கிறதோட சரி.இருந்தாலும் நீங்க சொன்னீங்கன்னு ஒரு ஓட்டுப் போடறேன்.///


அண்ணே ஒட்டு போட்டதுக்கு ரொம்ப நன்றிங்கண்ணா..
வழக்கம் போல உங்கள் ஆதரவு என்றும் எனக்கு வேண்டும் ..

உருப்புடாதது_அணிமா said...
December 9, 2008 3:35 PM

///////////இராகவன், நைஜிரியா சொன்னது…
// PoornimaSaran சொன்னது…

எந்த ஜோதி!!!!!!!!!!!!???????????? //

அய்ய... இந்த மாதிரி மொக்க கேள்வியெல்லாமா கேட்ப்பங்க...

கும்மி ஜோதிதான் எங்க ஜோதி... யாரவது கிடைக்க மாட்டாங்களான் பார்த்துட்டு இருக்கோம்.. வந்தா சும்மா கும்மு, கும்முன்னு கும்மிட மாட்டோம்.../////////


நன்றி திரு ராகவன் அவர்களே, இவரு மட்டும் ஒரு மொக்கை கவுஜை எழுதட்டும், நாம மொத்தமா போயி கும்மிடலாம்.. என்ன சொல்றீங்க??
( இருந்தாலும் அவிங்க கவிதை எல்லாம் ரொம்ப அழகுங்கோ ..)

பழமைபேசி said...
December 9, 2008 5:30 PM

நீங்க ப்திவுலகத்தை விட்டு ஓடிப்போன நேரத்துல உங்களுக்காக, நாம போட்ட பதிவு இது!
http://maniyinpakkam.blogspot.com/2008/11/blog-post_25.html

இராகவன், நைஜிரியா said...
December 10, 2008 2:00 AM

//உருப்புடாதது_அணிமா சொன்னது…
///இராகவன், நைஜீரியா சொன்னது…
பார்த்துப்பா.. பெரும் படை அப்படின்னு சொல்லிபிட்டு யாரவது ஜாலிம்லோஷன் அனுப்பிச்சிட போறாங்க..///

ஆமாம்? அந்த மருந்து எதுக்கு ?? உங்களுக்கு எதுனா ப்ரோப்லேம் இருக்கா??//

அடப்பாவி மனுஷா.. இவ்வளவு ஞாபக மறதியா இருக்கியே... உனக்காக ஸ்பெஷலா சொல்லி, இந்தியாவிலிருந்து இம்போர்ட் பண்ணி கொடுத்தேனே ஞாபகமில்லையா? இப்படி எல்லாம் மறந்து போகக்கூடாது...

நாகை சிவா said...
December 10, 2008 5:41 AM

//எதுனா சொல்லிட்டு போங்க..
இல்ல திட்டிட்டாவது போங்க..//

சொல்ல ஒன்னும் இல்ல...
நண்பன் ஆச்சே நீ அதுனால திட்டவும் முடியல

இருந்தாலும் உனக்கு எதாவது தரணுமே...

துப்பிட்டு போகட்டா ;)x

பழமைபேசி said...
December 10, 2008 12:47 PM

அஃ!ஃ!ஃஃஃஃஃக‌ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃகா!
அஃ!ஃ!ஃஃஃஃஃக‌ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃகா!
அஃ!ஃ!ஃஃஃஃஃக‌ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃகா!
அஃ!ஃ!ஃஃஃஃஃக‌ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃகா!
அஃ!ஃ!ஃஃஃஃஃக‌ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃகா!

சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல, அதான் சிரிப்பு!

Poornima Saravana kumar said...
December 11, 2008 11:25 AM

//உருப்புடாதது_அணிமா சொன்னது…


///////////இராகவன், நைஜிரியா சொன்னது…
// PoornimaSaran சொன்னது…

எந்த ஜோதி!!!!!!!!!!!!???????????? //

அய்ய... இந்த மாதிரி மொக்க கேள்வியெல்லாமா கேட்ப்பங்க...

கும்மி ஜோதிதான் எங்க ஜோதி... யாரவது கிடைக்க மாட்டாங்களான் பார்த்துட்டு இருக்கோம்.. வந்தா சும்மா கும்மு, கும்முன்னு கும்மிட மாட்டோம்.../////////


நன்றி திரு ராகவன் அவர்களே, இவரு மட்டும் ஒரு மொக்கை கவுஜை எழுதட்டும், நாம மொத்தமா போயி கும்மிடலாம்.. என்ன சொல்றீங்க??
( இருந்தாலும் அவிங்க கவிதை எல்லாம் ரொம்ப அழகுங்கோ ..)

//

ஹி ஹி ஹி
ரொம்ப புகழாதீங்க ப்ளீஸ்..
இந்த விளம்பரம் எல்லாம் பிடிக்காது எனக்கு!!!!

Poornima Saravana kumar said...
December 11, 2008 11:26 AM

அப்புறம் நம்ம ப்ளாக் பக்கம் வந்தீங்களா????

Poornima Saravana kumar said...
December 11, 2008 11:29 AM

ஆமா எவ்வளவு நாளைக்கு தான் இந்த ஒரே பதிவ வச்சு ஓப்பேத்துவீங்க?? ஆடிக்கு ஒருக்கா, அம்மாவாசைக்கு ஒருக்கா போடும் நானே இதற்க்கு
அப்புறம் 2 பதிவு போட்டுட்டேன்..

Poornima Saravana kumar said...
December 11, 2008 11:46 AM

வாங்கய்யா வாங்க ஒரு நாலு பேரு சேர்ந்து ஒரு நாற்ப்பது கேள்வி கேட்டாதான் இந்த உருப்படாத அணிமா அடுத்த போஸ்ட்ட போடுவாங்க போல..
இதற்க்கு மேல் யார் வேணாலும் கிழி கிழினு கிழிக்கலாம்...

Poornima Saravana kumar said...
December 11, 2008 11:50 AM

me the 95th

கபீஷ் said...
December 12, 2008 1:51 AM

96

கபீஷ் said...
December 12, 2008 1:52 AM

98

கபீஷ் said...
December 12, 2008 1:52 AM

97

கபீஷ் said...
December 12, 2008 1:53 AM

100!!!!

கபீஷ் said...
December 12, 2008 1:53 AM

99

இராகவன், நைஜிரியா said...
December 12, 2008 4:56 AM

சதம் கண்ட அணிமா வாழ்க....

(வயசு இல்ல... பின்னூட்டத்தில்..)

Anonymous said...
December 12, 2008 5:38 AM

இப்ப நீங்க வரலைன்னு யார் அழுதா....

pathivu said...
December 12, 2008 10:19 AM

//இப்ப நீங்க வரலைன்னு யார் அழுதா....//

அனானி, நாங்க எல்லாம் தான்.

Vishnu... said...
December 13, 2008 7:48 AM

வணக்கம் நானும் வந்திட்டேன் ...

எப்படி இருக்கீக தலை ???

Vishnu... said...
December 13, 2008 7:54 AM

ஆகா .. எனக்கு தெரியாம வந்திட்டு ஒரு பதிவும் போட்டு ...அதுல ..நூரு
(கும்மி) பின்னுட்டமா ???

என்ன தான் நடக்குது இங்க ...

Vishnu... said...
December 13, 2008 7:55 AM

விட்டா கடுச்சு குதறிய பட்டம் வேற யாருக்காவது போயிடுமோ ?...

ஆரம்பிச்சிட வேண்டியது தான் ..யோசிச்சு பயன் இல்லை ...

Vishnu... said...
December 13, 2008 7:57 AM

//உருப்புடாதது_அணிமா சொன்னது…

எல்லோரும் எப்படி இருக்கீங்க??
சௌக்கியமா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..//

கேள்வி தானே கேட்டு ..பதிலும் தானே சொல்றியே ..நைனா ...

Vishnu... said...
December 13, 2008 8:01 AM

//உருப்புடாதது_அணிமா சொன்னது…

அப்புறம் என்னடா ஆள் எங்கியோ எஸ்கேப் ஆயிட்டான்னு //

சும்மா சொல்லு தலை ...போன தடவை அந்த பொண்ணுக்கு கலக்ட் பண்ண பணம் என்ன பண்ணுன ..... அதை வச்சு தான் இவ்வளவு நாள் எஸ்கேப் ஆ ??

S.R.Rajasekaran said...
December 15, 2008 10:57 AM

அட உண்மையிலே அந்த ஏழை பொண்ணுக்கு டவ்சர் வாங்கத்தான் போய்டிங்கலோன்னு நினைச்சேன்

S.R.Rajasekaran said...
December 15, 2008 11:21 AM

அப்புறம் அண்ணே நீங்க ரெம்ப ரெம்ப நல்லவருங்க ,உங்களுக்கு ரெம்ப இளகிய மனசு அண்ணே ,அண்ணே முக்கியமா GLENFIDDICH ,CHIVAS REGAL,ரெண்டு புல்லையும் அனுப்ப மறந்துராதிங்க

Srimathi said...
December 16, 2008 1:19 AM

:))

பழமைபேசி said...
December 16, 2008 3:43 AM

http://maniyinpakkam.blogspot.com/2008/11/blog-post_25.html

RAD MADHAV said...
December 16, 2008 4:59 AM

YENKITTA VORU KILINZHU
PONA JATTI ERUKKUTHU, VENUMA... AVVALAVUDHAN YENNALA VUTHAVI PANNA MUDIYUM

Post a Comment