Monday, December 29, 2008

Butterfly Effect : கடைசி பதிவு ..


பட பட பட்டாம் பூச்சி விருது ..

நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் அப்படின்னு எத்தனை தபா கூவுனாலும் யாருமே எங்கள ( சரி சரி என்னை இப்போ நிம்மதியா ??) திரும்பி பாக்காததுனால, நான் ரவுடி இல்லியோ அப்படின்னு சந்தேகம் ரொம்ப நாளாவே இருந்தது.. ( என்னாது எங்க இருந்துதா?? எங்கேயா?? , எங்க வீட்டு பரண் மேல இருந்தது )) அப்புறமா நானும் போலீஸ் ஸ்டேஷன் போயி என்னையும் ரவுடி தான்னு இந்த உலகத்துக்கு சொன்னா மாதிரி தான் இப்போ இங்கே நீங்க பார்த்துகிட்டு இருக்குற விருதும்..
( எப்படி? எவ்ளோ சீக்கிரமா மேட்டர்க்கு வந்துட்டேன் பார்த்தீங்களா?? )


ஆனா பாருங்க இந்த விருத குடுத்தவங்க ராகவன் அண்ணாச்சி பெரிய ஆளா இருக்கார் . ஆனா அத வாங்குற தகுதி நமக்கு ( சரி சரி ) எனக்கு இருக்குதானா , அது சந்தேகம் தான்..
இருந்தாலும் படிக்காமலே , அரசியல்வாதி அப்படிங்கிற தகுதிய மட்டும் வைச்சிக்கிட்டு டாக்டர் பட்டம் வாங்குறதுக்கு இது எவ்வளவோ மேல் அப்படின்னு மனச தேத்திகிட்டு நானும் இந்த விருத ஆனந்த கண்ணீரோடு வாங்க்கிறேன் .. ( கைதட்டல் ஓசை )

அப்புறம் இருந்தாலும் இந்த ராகவன் அண்ணாச்சிக்கு இருக்குற குறும்போட அளவு தாங்கலப்பா.. For The Coolest Blog I Ever Know இது பார்த்து நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது.. Coolest Blog?? ஆமா இது எந்த பிரிவுல என்னோட Blog அடங்குது அப்படின்னு யாராச்சும் ( அட்லீஸ்ட் ராகவன் அண்ணனாவது சொல்லுங்க ) .. எப்படி இப்படி எல்லாம் அபாண்டமா பொய் சொல்லி , இப்படி எனக்கு விருத குடுத்தீங்க.. ( விருது குடுத்ததால் முன்பே வாக்களித்தபடி ஹி ஹி கண்டிப்பா உங்களுக்கு விஸ்கி வாங்கி தருவேன் .. )

அப்புறம் இந்த விருத வாங்கணும்னா சில விதிமுறைகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தால், அந்த விதிமுறைகளை மீறுவேன் என்பதை இங்கு சொல்லி கொள்ள ஆசைபடுக்கிறேன்.. ( சும்மா தமாசு தமாசு ...)

விதி முறைகள் (பழையது ) : ( சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு )

1. Put the logo on your blog.
2. Add a link to the person who awarded you.

3. Nominate at least 7 other blogs.

4. Add links to those blogs on yours.

5. Leave a message for your nominees on their blogs.

இது தான் மூல ( வெளி மூலமா உள் மூலமா ? அப்படின்னு யாருப்பா அங்க கேக்குறது ?? ) விதிமுறைகள் என்று என்னுடைய ஆராய்ச்சியின் முடிவில் அறிந்தேன்..
இருந்தாலும் நம்ம ஆளுங்க பாருங்க, எங்க போயி பத்து பேர தேடுறதுன்னு நம்ம சவுரியதிற்க்கு ஏற்றார் போல மூணு பேருன்னு திருத்தி விட்டார்கள்..
அவங்களுக்கு பல நூறு கோடி நன்றிகள்.. இல்லாட்டி நான் மட்டும் எங்க போய் அவங்கள அத்தன பேர புடிக்கிறது ..

சரி இப்போ விதி முறைகள் படி, இந்த விருதுகள் எப்படி , யார் யாருக்கு, யார் யார் குடுத்து அப்படின்னு பார்ப்போம்.. இதுக்கு நம்ப ராகவன் அண்ணன் லிஸ்ட் குடுத்துள்ளார்.. அதே போல என் பங்குக்கு நானும் ..

அணிமா <----

ராகவன் <----

ரம்யா <----

பூர்ணிமா <----

விஜய் <-----

திவ்ய பிரியா
<------

G3(பிரவாகம் )--->

கார்த்தி/mgnithi--->

Gils/Shanki---->

பிரியா -->

Kartz---->


Tusharmargal--->

Akansha---->

Infinity---->

Simple Elegant Girl ---- >

Chronic Chick Talk
----->

Empty Streets----->

The Blog Reviewer
--->

biotecK---->

KisAhberuang---->


blogscope
>>>>>> (இவரு தான் ஆரம்பிச்சு வைச்சாரா?? தெரியில..)

(இதுக்கு மேல கண்டு பிடிக்க என்னனால முடியாதுடா சாமி)

ஐயா புண்ணியவான்களே , இவங்க தான் இந்த அவார்ட் விளையாட்ட தொடர்ந்து வெற்றி கரமா நடத்தி , அந்த விருதும் என்னை இன்னிக்கு வந்து சேர்ந்ததுக்கு எல்லா காரணங்களும் மற்றும் எனது நன்றிகளும் இவிங்கள தான் சேரும் ...

இவ்ளோ நல்லவங்க நடுவால இருந்திருக்காங்கன்னு நினைக்கும் போது ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(அவ்வளவு நல்லவங்களா இவிங்க..??.)

சரி இப்போ ஒரிஜினல் மேட்டர் க்கு வருவோம்.. புது விதிமுறைகளின் படி, இதோ நான் அழைக்கும் (பழக்க தோஷம் ) குடுக்க போகும் மூன்று பதிவர்கள்..( யார் பேராச்சும் விட்டு போச்சு, என் பேர் இந்த விருது லிஸ்ட்ல இல்ல அப்படின்னு என்கிட்டே சண்டைக்கு வராதீங்க.. இப்பவே சொல்லி ப்புட்டேன்.. )

1. மோகன் - என்ன தம்பி என்ன ஆச்சு?? ரொம்ப நாலா என் கடைபக்கமும் காணும்??


2. கூடுதுறை - அண்ணே, கடைசியா நீங்க போட்ட பதிவு உங்களுக்காவது நியாபகம் இருக்கா??


3. நசரேயன் - நம்மள விட இவரு கொஞ்சம் கலர் குறைவு தான் என்ற பெருமை இவருக்கு எப்பவுமே உண்டு .. ( நீங்க எழுதிய கதைக்கு தான் இந்த விருது ) மேலும் 700 பின்னூட்டங்கள் (அதற்க்கு மேலும் ) பெற்றவர்..

இப்போ உங்களுக்கான விதிமுறைகள் :

*இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போட்டுடனும். *உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த இந்த நல்லவரை மறந்திடக்கூடாது. *நீங்களும் என்னை மாதிரியே நல்ல மனதோட யாருக்காவது பங்கை சரியா கொடுத்திரனும். ( நன்றி பூர்ணிமா )

பின்குறிப்பு :

டிஸ்கி : என்னது தலைப்புக்கும் உள்ளே இருக்குற மேட்டர் க்கும் சம்பந்தம் இல்லியா?? அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?? எப்படியோ இந்த வருடத்தின் என்னுடைய கடைசி பதிவ எழுத வைத்த அண்ணன் ராகவனுக்கு மிக்க கோடானு கோடி நன்றிகள் ( இது போதுமா அண்ணே )

அப்புறம் முக்கியமா எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..





Wednesday, December 24, 2008

நைஜீரியாவில் இருந்து இன்னொரு பதிவர் (கொடுமையோ கொடுமை )



என்ன பன்றது விதி அப்படின்னு ஒன்னு இருக்குறத நாம நம்பி தான் ஆகணும் போல இருக்கே..
சும்மா பேச்சுக்கு சொன்னேன் அண்ணே ப்ளாக் ஒன்னு ஆரம்பிங்க அப்படின்னு , அதுக்காக இப்படியா?
உடனே ப்ளாக் ஆரம்பிச்சுட்டாரு இந்த நம்ம ராகவன் அண்ணன்..
உம்.. என்ன பண்றது அவர எழுத வைச்சி நம்ம போஸ்ட் ல பதிவு போடலாம்னு இருந்த நம்ம ஆசையில மண்ண தூவிட்டு அவுரே அவுருக்குன்னு ஒரு பக்கத்த ஆரம்பிச்சிட்டாரே..
இந்த கொடுமைய கேக்க யாருமே இல்லியா??

சரி விடுங்க, நாம என்ன தான் உருண்டு பொரண்டாலும் ஓட்ற மண்ணு தானே ஓட்டும்.. அது போல நான் எவ்ளோ தான் முயற்சி பண்ணி அவுர பதிவுலகம் பக்கம் வர வைக்க வேண்டாம்னு பார்த்தேன்.. என்ன பண்றது, அவுரு என்னோட சதி திட்டத்த புரிஞ்சிக்கிட்டு அவுருக்காகவே ஒரு வலைபக்கத்தை ஓப்பன் பண்ணிட்டாரு..

அண்ணே வாழ்த்துக்கிறேன்..



அப்படியே இந்த பதிவானது ( என்னது இது பதிவா அப்படி எல்லாம் கேக்க கூடாது ) போன பதிவின் ( என்னது? போன ஒன்னும் பதிவா??? அப்படியும் கேக்க கூடாது ) தொடர்ச்சி என்றே சொல்லலாம்.

அதாக பட்டது, நைஜீரியா வாசகர் - பதிவர் சந்திப்பை பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள்.. அங்கு நடந்தவைகளை ராகவன் அண்ணன் எப்படி புட்டு புட்டு ( சாப்பிற புட்டு இல்லீங்க) வைத்ததை , நிழற்படங்களாக உங்கள் முன்...











(அண்ணன் ராகவன் மற்றும் உங்கள் அன்பு( கிளிஞ்சது )அணிமா...
வந்து எம்மாம் நேரம் ஆச்சு, ஒன்னுமே குடுக்க மாட்டேன்கிறாரே??

(ராகவன் நண்பர், ராகவன், என்னோட நண்பர், அணிமா மற்றும் ஜூனியர் ராகவன் )
(எப்படி யோசிக்கிறேன் பாருங்க???? ஏதோ wine தரேன்னு சொன்னாரே?? இன்னும்
குடுக்க காணும்?? )
(ஜூனியர் ராகவன் அண்ட் பக்கத்து வீட்டு ஜூனியர்)

(ஐயா போட்டோ க்கு போஸ் குடுங்க )

( மேலும் கீழும் ராகவன் மற்றும் அவோராட நண்பர்) என்ன சிரிப்பு வேண்டி
கிடக்குது ?? சட்டை போடாம நம்மள சட்டையும் பண்ண மாட்டேன்கிறாரே ?)
ராகவன் மனசுக்குள்: எவ்ளோ நேரம் தான் நானும் போட்டோ க்கு போஸ்
குடுக்குற மாதிரியே நடிக்கிறது ?)



அதே போல வாசகராக இருந்து பல பதிவர்களுக்கு ஊக்க மருந்தான அண்ணா ராகவன் அவர்களுக்ள்கும் இந்த பதிவுலகம் ஊக்கம் அளிக்கும் என்று நம்பி, உங்கள் சார்பாக அண்ணனை அன்போடு வரவேற்கிறேன்.. வந்து கலக்குங்க அண்ணே...

( இந்த பதிவில் எந்த இடத்தில் க்ளிக்க்கினாலும் அண்ணன் ராகவன்
வலைப்பதிவிற்கு செல்லலாம்.. அப்படி இல்லை என்றால் இதோ அவருடைய முகவரி (முக வெறின்னு கூட சொல்லலாம்.. ஹா ஹி ஹீ ) http://raghavannigeria.blogspot.com/ )

அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம்...
எல்லோருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் முன் அறிவிப்பாக புத்தாண்டு நல்
வாழ்த்துக்கள்

அவ்ளோ தான் மேட்டர்..
இப்போதைக்கு வரட்டா...



Tuesday, December 16, 2008

நைஜீரியாவில் நடந்த பயங்கரம் ( பதிவர்-வாசகர் சந்திப்பு)

நண்பர்களே...

எல்லோருக்கும் வழக்கம் போல வணக்கங்கள்.. ( கும்புடுறேன் சாமி )

இங்க நைஜீரியாவுல நடந்த பதிவர் - வாசகர் சந்திப்பு பற்றி பதிவு போடனும்னு நினைச்சு பதிவு போடாமலே காலத்த கடத்திட்டேன்.. அப்படி இருக்கும் போது தான் மனசுக்குள்ள ஒரு சின்ன டியுப் லைட் ( நான் இல்லீங்க) எரிஞ்சது .. பதிவர் ( அது நான் தாங்க, வேற யாருன்னு தேடாதீங்க, என்னது நான் பதிவர் இல்லியா?? என்ன சொல்றீங்க இப்படி மொக்கையா இருவது பதிவு போட்டதால் நானும் பதிவர் தான்.. பார்த்துக்கோங்க நானும் பதிவர் தான்.. ) சரி சரி மேட்டர் க்கு வரேன்.. அந்த நிகழ்வை ( சந்திப்பு அல்ல.. இது சரித்திரத்தில் இடம் பெற போகும் நிகழ்ச்சி) நம்ம பின்னூட்ட பிதாமகர், வள்ளல் சக்கரவர்த்தி நைஜீரியா என்றதும் நினைவுக்கு வரும் நம்ம அண்ணன் ராகவன் அவர்களை இதை பற்றி எழுத சொல்லலாம் என்று நினைத்து அவரிடம் பேசி அவரும் சம்மதித்து இதோ அவர் எழுதி கொடுத்த வாசகர் - பதிவர் சந்திப்பு ( நிகழ்வு) உங்களுக்காக,,

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரவு 8.00 மணி...


தங்கமணி : இந்த அணிமா என்ன ஆனாருங்க.. ஒரு நாள் வந்தாரு அப்புறம் ஆளையே காணுமே..

நான் (ராகவன்) : இரும்மா.. போன் பண்ணி பாக்கிறேன்.. எங்க போனான்னே தெரியல..

போன் அடிக்கின்றது... கட் ஆகிவிட்டது...

பீப் பீப் .... ஒரு மெசேஜ் வருகின்றது....( அணிமாவிடம் இருந்து)

I am on roaming... I'll call u back...

சரி, நம்ம பழமை பேசி சொன்னது சரியா போச்சு போலிருக்கு, இந்த பையன் ஊர் சுத்திட்டு இருக்கான்.. இவனை எப்படி சரி பண்றது, நாம வேற பக்கத்தில் இங்க தான் இருக்கோம், ஏதாவது ஏடாகூடமா ஆயிடுச்சுன்னா, நம்ம பதிவர்கள் எல்லாம் நம்மள பொலி போட்டுடுவாங்களேன்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது தொ(ல்)லை பேசியில் ஒரு அழைப்பு.. யாருன்னு பார்த்தா நம்ம அணிமா...


இனி அதை அப்படியே உங்கள் பார்வைக்கு...
(இதில் ரா : இது என் பேச்சு, அ : அணிமா பேச்சு .. ()அடைப்பு குறிப்புக்குள் இருப்பது என் நிணைப்பு...

ரா : தம்பி.. வணக்கம்.. எங்கய்யா போய்ட்ட... பழமைபேசி உன்னை பற்றி பதிவு ஒன்னு போட்டு இருக்காரே படிச்சியா... (எங்கடா காணாம போய்ட்ட??)

அ : வணக்கம் அண்ணே.. பார்த்தேன், படிச்சேன்.. பின்னூட்டம் போட்டாச்சு.. இப்போ தான்சேனியாவில இருக்கேன்..

ரா : எப்பய்யா அங்க போன ??(இங்கயே வேலை இல்ல அங்க போய் என்ன பண்ண போற)
அ : நேத்து தீடீர்ன்னு வரவேண்டியதா போச்சு.. கொஞ்சம் வேலை ஜாஸ்திங்க..

ரா : என்னை பற்றி கூட ஒருவர் புகழ்ந்து எழுதியுள்ளார், படிச்சயா?

அ : இல்லங்க...

ரா : அப்பாவின்னு ஒருத்தர் என்ன பத்தி அப்பாவியா புகழ்ந்து எழுதியிருக்காரப்பா..( யாரவது ஒருத்தர் எழுதிடப்பிடாதே.. உடனே எல்லாருக்கும் தம்பட்டம் அடிச்சுடணும்.. அப்படித்தானே..)

அ : அப்படியா.. பார்க்கறேங்க..

ரா : பதிவர் - வாசகர் சந்திப்பு போடறேன்னு சொல்றியே என்ன ஆச்சுப்பா??..

அ : வித்யாசமா இருக்கட்டுமே.. நீங்களே எழுதிவிடுங்களேன்.. நான் என் பதிவில் அதை போடுகின்றேன்.

ரா : வேண்டாம்ப்பா.. நமக்கெலாம் எழுதவராது... நீ எழுது .. கும்மி அடிக்கலாம் (நாம் ஜாலியா கும்மி அடிக்கிறத உட்டுட்டு.. நம்ம யாரவது அடிக்கிறதா...no..no..its bad)

அ : இல்லீங்க.. வித்யாசமா இருக்கும்.. டிரை பண்ணி பார்க்கலாமே...

ரா : சரி.. டிரை பண்ணி பார்க்கலாமே... எழுதி தரேன் போடு...

இப்படிதாங்க என் தலையிலே இந்த பொறுப்பு வந்துடுச்சு...

இனிமே மாற்ற முடியுமா... முடியாது... சொக்கா..சொக்கா என கதறினாலும் முடியாது..

சரி இனி ஆண்டவன் விட்ட வழி...

ஃபார் ஆல் கும்மீஸ்..ரெடி..ஸ்டெடி..ஆக்சன்...கும்மி அடிக்க வாங்கோ, வாங்கோ..

ஓவர் டு பதிவர் - வாசகர் சந்திப்பு ஆன் 22.11.2008.

காலை 11.00 மணி (தொலைபேசியில்)

அ : அண்ணே உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க.. சாயங்காலம் இன்னும் இரண்டு நண்பர்கள் கூட வரேன்..

ரா : எஸ்.எம்.எஸ். அனுப்பறேன்.. பார்த்துகுங்க..

மாலை - 4.00 மணி..

அ : அண்ணே .. சாயங்காலம் சரியா 7 மணிக்கு வந்துவிடுகின்றேன்
ரா : சரி .. வழி தெரியுமா...
அ : கவலைய விடுங்க.. அபுஜா நமக்கு தண்ணி பட்ட பாடு.. எல்லா வழியும் நமக்கு அத்துபடி .. எப்படியாவது வந்துவிடுகின்றோம்.

மாலை - 7.20 மணி..

நண்பர்கள் புடை சூழ வருகின்றார்...
ரா : வாங்க, வாங்க.. எப்படி இருக்கீங்க..

அ : நல்லா இருக்கேன்.. இவர் நண்பர் from Madurai.... நண்பர் from Nainital என்று அறிமுக படலம் (ஆ)ரம்பமாயிற்று..

அ : ஜுனியர் எங்கங்க...

ரா : வெளியில போயிருக்கார்.. இன்னும் 30 நிமிஷத்தில் வந்துவிடுவார்.

அ : ஏங்க நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாதா?

ரா : நமக்கு அதெல்லாம் சரிபட்டு வராதப்பா..(வந்தவுடனேயே இப்படி மாட்டிவிட்டிட்டேயே.. ) நாமெல்லாம் நல்ல வாசகர்களா இருக்கத்தான் லாயக்கு..

அ : இல்லங்க.. நீங்க நல்லா எழுதிரீங்க.. பதிவு ஒன்னு ஆரம்பிங்க..

ரா : (இது எதடா வம்பா போச்சு) .. சரி என்ன சாப்பிடறீங்க.. Beer / Whisky / wine

அ : அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க...

ரா : (ரொம்ப நல்ல பையனாட்டம் ஆக்ட் குடுக்கின்றான் பாரேன்.. இவனை வச்சு ஒரு பெக் அடிக்கலாம்ன்னு பார்த்தா..இப்படி சொதப்பரானே.. )

இதற்க்குள் ஜுனியர் வந்து விடுகின்றார்.. ஜுனியரிடம் .. இவர்தான் உருப்பிடாதது அணிமா அங்கிள்.. மற்றும் இருவரையும் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது..


பின் என் நண்பர் ஒருவர் வந்தார் .. அவரை அறிமுகப்படுத்தும் படலம் நடந்தது..

நைஜிரியா வாழ்க்கை பற்றி பேசினோம்... சொந்த கதை, சோகக் கதை பற்றி பேச்சு வந்தது...

தங்கமணி : சாப்பிட்டுவிட்டு பேசலாமே...

சாப்பிட ஆரம்பித்தால், பின்ன எங்க பேச்சு...

நேரம் : 9.30 pm

அ : அண்ணே நேரமாகி விட்டது.. நாங்கள் கிளம்புகின்றோம்.

ரா : அடிக்கடி வாங்கப்பா... ( மறுபடியும் வந்துடுவானோ??? இது சும்மா தமாசுக்கு )


இவ்வளவுதான் பதிவர் - வாசகர் சந்திப்புல நடந்தது..

(யாரவது ரொம்ப கற்பனை பண்ணி இருந்தீங்கன்னா.. அவங்களுக்கெல்லாம் ஒரு சாரி)..

பி.கு. : போட்டோ எல்லாம் எடுத்தது அணிமா மட்டுமே... ( பெரிய பி சி ஸ்ரீ ராம்னு நிணைப்பு??)


பின்குறிப்பு :

ஓவர் பேக் டு அணிமா:

இது மட்டும் இல்லீங்க, இன்னும் பல விஷயங்கள் நடந்தது அதை பற்றிய விவரம் அடுத்த பகுதியில் நான் எழுதும் போது தெரிந்து கொள்ளுங்கள்.. அந்த பதிவில் போடோக்களை தருகிறேன்..

பிறகு நம்ம ராகவன் அண்ணன ஒரு ப்லாக் ஓபன் பண்ணி அவரையும் ஒரு பதிவரா மாற்ற நான் செய்த முதல் முயற்சி தான் அவரை எழுத தூண்டி விட்டது ..
இனி கண்டிப்பாக அவரும் அவருக்கென்று ஒரு வலைப்பக்கத்தை உருவாக்குவார் என்று நம்புகிறேன்..

அப்புறம் கும்மி அடிக்கும்போது ராகவன் அவர்களை மனதில் நினைத்து கும்மி அடிக்கவும்..
எல்லா கும்மிக்களும், ஆட்டோக்களும் திரு ராகவன் அவர்களின் அட்ரஸ்க்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்..

இப்போதைக்கு அவ்ளோ தான்..
வரட்டா..


ஹி ஹி ஹி ... என்ன பாக்குறீங்க, அது தான் தலைய சொறிஞ்சிகிட்டுஇழிக்கிறேன்ல அப்புறம் என்ன?? ஒழுங்கா மறக்காம ஒட்டு போட்டுட்டுஅப்படியே தமிழ் மனத்துலேயும் அழுத்திட்டு போங்க ....

Saturday, December 6, 2008

( மீண்டு வந்த) அணிமா is back ( இது அந்த back இல்லீங்க)

வணக்கம் மக்களே..

எல்லோரும் எப்படி இருக்கீங்க??

உங்கள் பாசத்திற்கு உரிய பாரதி ராஜா இல்லாத காரணத்தினால் நான் வந்திருக்கிறேன் .. ( வந்துடோம்ல)

சௌக்கியமா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..
( பின்ன உன் தொல்ல இல்லாம இவ்ளோ நாள் நல்லா தான் இருந்தோம்னு நீங்க உங்க மனசுல பேசுறது எனக்கு சத்தமா கேக்குது )

அப்புறம் என்னடா ஆள் எங்கியோ எஸ்கேப் ஆயிட்டான்னு நினைச்சிகிட்டு சந்தோசமா இருந்தா, இப்படி வந்து திடீர்னு என்னமோ கேட்டுகிட்டு இருக்கானே அப்படின்னு நீங்க கேக்கலாம். நீங்க கேக்கலைனாலும் நான் அப்படி தான் நினைச்சிக்குவேன்.. வேற வழி..??
என்ன பண்றது ? நம்ம சரி சரி என் நிலைமை அப்படி ஆகி போச்சு..

போன மாசத்துல ஒரு நாள், நான் தான் இந்த கம்பெனில ரொம்ப ஒழுக்கமா, வேலை செய்யுறதா அவங்களே நினைச்சி ( நல்லா நோட் பண்ணிக்குங்க, அவங்க தான் நினைச்சி, நான் அப்படி இல்லை ) நமக்கு இன்னொரு பொறுப்ப குடுத்து கண்ணு போய் அந்த் வேலையை ( ப்ராஜெக்ட் ) முடிச்சிட்டு வந்துடுன்னு சொல்லிட்டு நம்ம கைல குடுத்துடாங்க..

நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.. நான் எல்லாம் வேலை செய்கிற குரூப் கிடையாது, வேலை செய்யுற மாதிரி ஒப்பேத்துற குரூப் அப்படி இப்படின்னு என்ன என்னவோ பிட்ட போட்டு பார்த்தேன்.. உம் வேலைக்கு ஒன்னிம் ஆகல..
சரி கழுதை, நாமளும் ஒரு கை பார்த்துடலாம்னு முடிவு செய்ஞ்சு ஓகே அப்படின்னு சொல்லிட்டேன்..

மக்கா, ஆனா ஒன்னு.. ஓகே சொன்னதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எழவு அது ஒன்னும் அவ்ளோ சுளுவு கிடையாதுன்னு.. சரி நாம தான் எவ்ளோ அடிச்சாலும் சாரி எவ்ளோ கஷ்டம் வந்தாலும் சும்மா எதிர்த்து போராடுவோம்ல, அதே மாதிரி தலை கீழா நின்னு பார்த்து ஒரு வழியா அந்த ப்ராஜெக்ட் முடிச்சி குடுத்துட்டு, ரொம்ப பந்தாவா அவங்க முன்னாடி நின்னேன்..

நம்ம வேல திறமைய பார்த்துட்டு ( சரியா சொல்லனும்னா,திடுக்கிட்டு ) உடனே இன்னொரு ஆபிஸர கூப்ட்டு அப்பா, நாங்க இவர்க்கிட்ட கொடுத்த ப்ராஜெக்ட் இது.. இப்போ நீங்க போயி இதே ப்ராஜெக்ட் செய்ங்க அப்படின்னு சொன்னாரு.. எனக்கு ஒன்னிமே புரியல, என்னடா இது நாம அவங்க குடுத்த வேலைய கரெக்டா முடிச்சிட்டோமே, அப்புறம் எதுக்கு அதே வேலைய இன்னொருதர்க்கிட்ட கொடுத்து செய்ய சொல்றாங்க அப்படின்னு நினைச்சிக்கிட்டு ஏன்? என்னாச்சு? அப்படின்னு கேள்வி மேல கேட்டு அவங்கள கொடஞ்சேன் ..


அதுக்கு அவங்க சொல்றாங்க, ஐயா நீங்க இந்த மாதிரி தான் வேலை செய்வீங்கன்னு எங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா சத்தியமா இந்த ப்ராஜெக்ட் உங்க கிட்ட கொடுத்திருக்க மாடோம்னு சொல்லி ஒ ன்னு அழறாங்க..

சரி நாம தான் ரொம்ப பெருந்தன்மை உள்ளவங்களாச்சே.. அப்புறமா அவங்கள சமாதான படுத்தி , சரி சரி விடுங்க.. நான் தான் முன்னாடியே சொன்னேன்ல, எனக்கு இந்த மாதிரி சின்ன சின்ன ப்ராஜெக்ட் எல்லாம் தராதீங்கன்னு, விடுங்க அடுத்த தடவை வேற ஒரு நல்ல பெரிய ப்ராஜெக்ட் இருந்தா குடுங்க நான் நல்லபடி முடிச்சி தரேன்னு சொன்னது தான் தாமதம் அப்போ டம்முன்னு ஒரு சத்தம்..

என்ன சத்தமா, ?? வேற ஒன்னும் இல்லீங்க.. நாம பெரிய சீனியர் ஆபிசர் மயக்கம் போட்டு உழுந்த சத்தம்னு உங்களுக்கு சொல்லனுமா என்ன??

என்னவோ, எப்படியோ ஒரு வழிய அவங்க கிட்டு இருந்து தப்ப்பிசி, இதோ உங்கள ஒரு வழி பண்ண இப்போ மறுபடியும் அவதாரம் ( இதிக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல) எடுத்து வந்துருக்கேன்..

சோ ( நம்ம so இல்லீங்க இது இங்க்ளிபீசு so ) இனிமேல் வழக்கம் போல என்னுடைய அதிரடி நடவடிக்கைகள் ( என்ன நடவடிக்கையா? அத தெரியாதவங்க தெரிஞ்சவங்க கிட்ட போயி கேட்டுக்கோங்க ) தொடரும்னு சொல்லிட்டு , இதோ இப்போதைக்கு ஜகா வாங்கிட்டு அடுத்த பதிவுல இங்க நைஜீரியாவுல நடந்த விறுவிறுப்பான பதிவர் -வாசகர் சந்திப்பு பற்றி எழுதலாம்னு நினைக்கிறேன்..( பல உண்மைகள் வெளிச்சத்தில் வரும் என்று நினைக்கிறேன் )


மேலும் நான் இல்லாத நாட்களில் , என் மேல் அக்கறை கொண்டு என்னை பற்றி விசாரித்த அனைவருக்கும் நன்றி.. முக்கியம்மா இங்க நைஜீரியாவுல இருக்குற நம்ம வாசக நண்பர் திரு ராகவன் அவர்கள் அடிக்கடி தொல்லை பேசியில் தொல்லை கொண்டு சாரி நலம் விசாரித்தார்.. அவருக்கும் நன்றி ...

அப்புறம் நான் ஏதோ ஊரை விட்டு ஓடி போய் விட்டதாக வதந்தி பரப்பியவர்களை தேடி கொண்டிருக்கிறேன்.. ( கண்டு பிடித்து தருபவர்களுக்கு சென்ற முறை குடுத்த CHIVAS REGAL போலவே இந்த முறை GLENFIDDICH ஒரு புல் அனுப்பி வைக்கப்படும்)

இதுல்ல, நம்ம வருங்கால முதல்வர் என்னை காணவில்லை அப்படின்னு ஒரு பதிவே போட்டு நம்ம மேல இருக்குற பாசத்த காட்டிட்டாரு ( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ், அதுல என் மானத்த வேற கப்பல் ஏத்தி அதுல குளிர் காஞ்சதா நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன )

மறுக்கா சொல்றேன்.. எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி..

அதே வேளையில் இந்த வாரம் நட்சரமாக இருக்கும் அண்ணன் பழமைபேசி அவர்கள்ளுக்கு வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்..

அப்புறம் முக்கியமான விஷயம், மக்களே மேல சொன்ன ( அந்த ப்ராஜெக்ட் கதை ) எதுவும் கண்டிப்பா என்னோட வாழ்கையில் நடந்த சம்பவங்கள் இல்லை அப்படின்னு நான் சொல்லலானாலும் நீங்க நம்பி தான் ஆகணும் .. ஏனா, அது என்னோட கதை அல்ல..

என்னது ? நம்ப மாடீங்களா?? சரி போங்க உங்கள எல்லாம் திருத்தவே முடியாது ..


இப்ப்போதைக்கு வர்ட்டா.... அடுத்த பதிவுல மீட் பண்றேன்..


ஒட்டு போடுங்க அப்படின்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன்.. ஏனா நீங்கபோடுவீங்க அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும் அதே போல தமிழ்மணபட்டையில இருக்குற தம்ஸ் அப்பு குத்துங்க அப்படினும் நான் சொல்லமாட்டேன் ..

Saturday, November 15, 2008

பதிவர்களே இந்த ஏழை பெண்ணுக்கு ( மனசிருந்தால் ) உதவுங்களேன் ..

நான் பெரும்பாலும் எனக்கு வரும் மின்னஞ்சல்களில் இவருக்கு உதவுங்கள்அவருக்கு உதவுங்கள் என்று வரும் போது பெரிதாக அலட்டி கொள்ளமாட்டேன். அப்பொழுது எல்லாம் நான் சில நேரங்களில் பரிதாபபடுவேன், அப்புறம் அதைபத்தி மறந்தும் விடுவேன்..

ஆனால், நேற்று மாலை நான் எனது மெயில் பாக்ஸ் செக் செய்துகொண்டிருந்தபொழுது, அதே போல ஒரு மெயில் கண்ணில் பட்டது. வழக்கம்போல அதே பல்லவி தானே என்று நினைத்துக்கொண்டே திறந்து பார்த்தேன்.

அதை பார்த்தும் அதிர்ந்தேன்..

வாழ்க்கையில் பலருக்கு பல கஷ்டங்கள் வரும். அது போல இந்த பெண்ணுக்கும்பல கஷ்டங்கள்.. ஆனால் அவர் யாரிடமும் எந்த உதவியும் வேண்டாமல்இருக்கின்றார். அப்படிப்பட்ட நல் உள்ளத்தை பாராட்டியே ஆக வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன்.

பிறகு அவருக்கு உதவி செய்தால் என்ன என்று ஒரு எண்ணம் தோன்றியது.. அதன் விளைவே இந்த பதிவாகும்..

நான் சொல்ல போகும் இந்த பெண்மணி மிகுந்த பணக்கஷ்டத்தில் உள்ளார். பணக்கஷ்டம் மட்டும் இல்லை, இவர் வாழ்ந்த நாட்கள் அப்படி.. ஆனால் இன்றோஅவர் உடுத்த சரியான உடை கூட அவரிடம் இல்லை..இவர் பல கஷ்டங்களுக்குஇடையில் வாழ்ந்து வருகிறார். இவர் பலருக்கு பின் சாரி முன் உதாரணமாகஇருந்தார் (உள்ளார்.). இவருக்கு உதவி செய்தே ஆக வேண்டும் என்பதுஎன்னுடைய விருப்பம் ஆகும்.

எனவே எனது பதிவுலக நண்பர்களே, நீங்கள் உண்மையாக யாருக்காவது உதவவேண்டும் என்ற விருப்பம் இருந்தால், பண உதவி செய்ய விருப்பப்பட்டால்உடனே எனது முகவரிக்கு பணத்தை அனுப்ப வேண்டுக்கிறேன்,..
நான் உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுவேன்..

மேலும், நான் உதவ போகும் அந்த பெண்மணியின் புகைப்படம் உங்கள்பார்வைக்கு ..

இங்கிலிபீசு :

I normally don't forward such mails. But this girl seems to have been struck by an awful tragedy, which has landed her in this pitiable state. One look at her picture (pasted below) will convince you of her condition. Anyone willing to support her and provide some help will be doing a great service. Please send your cheques in my name and I will pass on the amount to her.

^
^
^
^
^
^
^
^
^
^



















பின் குறிப்பு :

என்னோட பதிவுல ரொம்ப சீரியஸா உண்மையா இருக்கும் போல அப்படின்னுநினைச்சு வந்து ஏமாந்து போனீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்.. இப்படி தான் மொக்கையா ஏதாவது எழுதுவேன்..

இருந்தாலும், இதனால் யாரவது மன வருந்தினால், அவர்களுக்கு ஆண்களாகஇருப்பின் ஒரு chivas regal புல்லும், பெண்களாக இருப்பின் ஒரு கைகுட்டையும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்..


நன்றி : வேற யாருக்கு.. இத மெயில்ல அனுப்பிய புண்ணியவானுக்கு தான்.



Friday, November 7, 2008

ஒண்ணுமே புரியில உலகத்துல

ஒண்ணுமே புரியில உலகத்துல, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...

என்னடா இவன் பாட்டு பாடிகிட்டு இருக்கானேன்னு பாக்குறீங்களா ??
என்ன பண்றது என் நிலைமை வேற யாருக்கும் வர கூடாது..
என்னால என்னோட பதிவுகளை தமிழ்மணத்துல இணைக்க முடியவில்லை..
அதனால தான் இந்த பாட்டு ...

ஐயா தர்ம பிரபுக்களே...

ஐயா தர்ம பிரபுக்களே...
என்னால் போன பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை...
உங்களால் முடிஞ்சா தர்மம் ச்சே உதவி பண்ணுங்க சாமிக்களே ??

Thursday, November 6, 2008

என்னோடு எப்போதும்…. மென்பொருட்களுக்கான தொடர்விளையாட்டு




நம்ம தம்பி சுபாஷ் அவர்கள் இந்த தொடர் ஓட்டத்துக்கு மிகுந்த பாசத்துடன்
( கொலைவெறியுடன் ) அழைத்திருந்தார் ... அவருக்கு என்னுடைய மனமார்ந்த (கொலைவெறி ) நன்றிகள் .... ( அப்புறம் முக்கியமா நீங்க பின்குறிப்ப படிச்சே ஆகணும் )

இந்த தொடர்பதிவானது முதலில் திரு ஊரோடி அவர்களிடம் இருந்து ஆரம்பித்து பிறகு மாயா வழியாக தம்பி சுபாஷை அடைந்து இப்பொழுது ( உங்க பொல்லாத நேரம் ) என்னை வந்து அடைந்து உள்ளது ...
இதையே ரொம்ப சுளுவா சொல்லனும்னா,

ஊரோடி-> மாயா -> சுபாஷ் -> அணிமா ( உருப்புடாதது )

எனக்கு ஒன்னு மட்டும் புரியில , இந்த சுபாஷுக்கு என்ன தைரியம் இருந்தால், என் மேல எவ்ளோ நம்பிக்கை இருந்தால் என்னை போயி இந்த மென்பொருள் விளையாட்டுக்கு கூப்பிட்டு இருப்பார்... என்னவோ போங்க ஒண்ணு மட்டும் உறுதியா தெரியுது ஏதோ என்னை இந்த ஆட்டத்துல சேர்த்து விட்டு கும்மு கும்முன்னு கும்ம ஒரு காரணம் கிடைச்சுடிச்சு அவருக்கு ..

( இது இல்லனா மட்டும் சும்மாவா இருப்போம். நீ என்னத்த கிறுக்குனாலும் அது தான் நடக்கும் அப்படின்னு அந்த பக்கத்து சந்துக்குள்ள இருந்து சவுண்ட் உட்றது யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்...)

எனக்கு இந்த தொடரில் அகர வரிசைப்படி அமைப்பது கடினம் என்பதால் என்னுடைய கணினியில் உள்ள மென்பொருட்கள் பற்றிய பதிவு இதோ.. ( என்ன ஒரு பில்ட்டப்பு ?? )


Total Video Convertor -

எனக்கு மிகவும் பிடித்தமான மென்பொருள் இது..
எந்த video format என்றாலும் நமக்கு பிடித்தமான format ல மாற்றி பார்க்க மிகவும் நான் விரும்புவது இதை தான் .. ("Convert all video files to 3gp, mp4, psp, iPod, iPhone, swf, flv, DVD, VCD, Xbox360, PS3... !")

Easy Recovery Professional :

எதையாவது delete பண்ணிட்டு அப்புறமா குய்யோ முய்யோன்னு கத்துறது தான் என் பாலிசி.. அப்படி பட்ட நேரங்களில் எனக்கு மிகவும் பயனுள்ளது தான் இந்த மென்பொருள்..


முக்கியமா இந்த USB டிரைவ் ல கோப்புகளை சில நேரங்களில் format செய்து விட்டால் எனக்கு மீண்டும் recover பண்ண இந்த மென்பொருள் தான் வசதி /..



opera , Mozilla Firefox :

நான் இணையத்த உலா வர அதிகம் பயன்படுத்துவது இவர்கள் இருவரையும் தான்..



Face on BOdy :




எப்போவாச்சும் போர் அடிச்சா இத ஒப்பின் பண்ணி நண்பர்கள் படத்தை morph பண்ணி அவர்களுக்கு அனுப்பி அவர்களை ரணகளம் ஆக்க பயன்படுத்துவேன்.. நம்ம முகத்தை கழுத்து வரை வெட்டி , அப்புறமா அதை morph பண்ணி, ஒரே கொண்டாட்டம் தான் போங்க...

Internet Download Manager :

எல்லா விதமான கோப்புகள் மற்றும் சினிமா videos, flv video மற்றும் எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்ய நான் உபயோகபடுத்துவது...
வெரி வெரி குட் ஒன்... ( அதிகமா இந்த புது படங்களை இணையத்தில் இருந்து இதன் மூலம் தான் தரவிறக்கம் செய்வேன் ) இதில் இருக்கும் resume வசதி இதற்க்கு மேலும் சிறப்பு ..

Your Unistaller 2008 :



என்னுடைய மடிக்கணியில் எதாவது மென்பொருட்க்களை uninstall செய்ய நான் அதிகம் பயன்படுத்தவது இந்த மென்பொருளை தான். இதின் சிறப்பம்சம் என்னவென்றால் இது நம்ம program files உள்ள registry keys எல்லாவற்றையும் uninstall செய்து விடும்..


Realplayer :

பாடலோ, படமோ, flv வகை வீடியோக்களோ என்னுடைய விருப்பம் இதுதான்.
இதை பற்றிய விளக்கங்கள் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்..

Solid convertor pdf:




எல்லா விதமான கோப்புகளை ( எக்ஸ்செல், வோர்ட் ) pdf முறையில் மாற்ற நான் பயன்படுத்தும் மென்பொருள் Solid convertor pdf. மேலும் pdf கோப்புகளை கூட வோர்ட் அல்லது எக்ஸ்செல் முறையிலும் மாற்றலாம்.. பயனுள்ள மென்பொருள் இது..

அப்புறம் இன்னும் சில கொசுறுக்கு ::

Website Ripper Copier - ஒரு இணைய பக்கத்தை அப்படியே சேமித்து பிறகு நேரம் கிடைக்கும் போது படித்து கொள்ள..

Gimp : இதை பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆசை தான்.. இப்போ தான் ஆரம்பித்து உள்ளேன்.. பார்க்கலாம்..

WinRar/WinZip: கோப்புகளை சுருக்க மற்றும் விரிக்க ( தமிழாக்கம் சரிதானே??)

NHM Writer: சூரியனுக்கே டார்ச்சா??


அப்புறம் Folder access : நம்ம கோப்புக்களை பத்திரமாக கடவு சொல் கொண்டு பத்திரப்படுத்த நான் உபயோகிப்பது folder access.



அம்புட்டு
தாங்க... இதுக்கு மேலயும் இருக்கு ஆனா அது எல்லாம் எல்லோரும் அதிகமா யூஸ் பண்றது தான்.. அதனால நான் இதோட நிப்பாட்டிக்குறேன் ..
இதில் கூட

நான் மேலே சொன்ன எல்லா மென்பொருட்க்களும் எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும் இந்த விளையாட்டு நான் அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள் பற்றியது தானே.. அதனால கோச்சுக்காம இம்புட்டு நேரம் படிச்சதுக்கு நெம்ப நெம்ப நன்றிங்க ,....

அப்புறம் இந்த தொடர் விளையாட்டுல யாரையாச்சும் கோது விடுனுமாம்,.. பட் பாருங்க எனக்கு தான் மத்தவங்களை மாட்டி விடுறதுன்னா பிடிக்கவே பிடிக்காதே.. ( பொய் சொல்லவேஇல்லை உண்மை உண்மை ) இருந்தாலும் இந்த தொடர் விளையாட்டும் பல பேர் சென்று அடைய இதோ நான் அழைக்கும் நால்வர் படை

( இதில் உங்கள் விருப்பம் போல நீங்க எத்துனை பேரை வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.. எதுவும் வரைமுறை கிடையாது )

அதனால் நான் இந்த முக்கியமான ( எனக்கு அதிகம் தெரிந்த ) நால்வர்..









௧. மகேஷ் அண்ணாச்சி - காஷ்மீர் சுத்தி பார்த்து போதும் .. அப்படியே இந்த விளையாட்டுக்கும் வாங்க பிரதர்







௨. நசரேயன் - பதிவர் சந்திப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்.. இந்த தொடர் விளையாட்டுக்கு உங்க பங்கு முக்கியம் அதனால வந்து மறக்காம பதிவு போடுங்க..









௩. பழமைபேசி ஐயா : அண்ணே பாட்டுக்கு பாட்டு, கவிகாள மேகம் அவுங்களுக்கு நேரம் ஒதுக்குன மாதிரி அப்படியே இதுக்கும் ஒதுக்கி போடுங்க உங்க பதிவ..( ஜுன்னூன் தமிழ் )

மற்றும்










4. குடுகுடுப்பை : உங்களுக்கு நான் என்ன புதுசா சொல்ல??? வந்து போடுங்க உங்க பொன்னான பதிவை..




பின்குறிப்பு :


பதிவு போட ஒரு விசயமும் இல்லாம மோட்டு வளையத்தை பாத்துக்கிட்டு இருந்த போது எனக்கு அழைப்பு விடுத்த தம்பி நல்லா இருப்பா.. பதிவு போட எனக்கு இந்த தாவு தீருது, சும்மா அசால்ட எப்படி தான் தினத்துக்கும் ஒரு பதிவு போடுறாங்களோ நம்ம வலைப்பதிவர்கள்... நீங்க எல்லாம் ரொம்ப ரொம்ப கிரேட்டுங்க...

அப்படியே, நீங்களும் இந்த தொடர்பதிவை தொடர சிலரை அழைத்து இந்த தொடரும் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.

அப்புறம் இந்த பதிவில் நிறைய ஆங்கில வார்தைகள் கலந்து இருப்பதினால், தமிழ் அறிஞர்கள் மன்னிக்க வேண்டுக்கிறேன்..








Wednesday, October 15, 2008

கோத்து விட்டுட்டாங்க - சினிமா - சில நினைவுகள் (தொடர் பதிவு)



எனக்கு பதிவு எழுத மேட்டர் புடிச்சு கொடுங்க அப்படின்னு நானும் எல்லோர்கிட்டயும் ஐடியா கேட்டுக்கு இருந்த நேரத்துல, நம்ம அன்பு அண்ணன், திரு மகேஷ் அவர்கள் எனக்கு இந்த கொக்கி போட்டு கூப்பிட்டார். தொடரை தொடர அழைத்ததற்கு மிக்க நன்றி.. ( சொல்ல போனா பதிவு ஒன்னு போட ஐடியா குடுத்ததற்கு )

( சரியான விடைகளை தேடாதீர்கள் , எனக்கும் பரிட்சைக்கும் ஆகவே ஆகாது..விடைகள் சரி இலலை என்றால் பொறுத்தருள்க )

இப்போ கேள்வி பதில் பகுதிக்கு செல்வோமா??





1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எனக்கு நினைவு தெரிந்த வயதில் தான் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன் ( எனக்கு எந்த வயசுல நினைவு தெரிந்தது அப்படினெல்லாம் கேக்க கூடாது, சொல்லிபுட்டேன் ) ( இருந்தாலும் முயற்சி பண்ணி பார்த்ததுல அது எப்படியும் ஆறு அல்லது ஏழு வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன் )

நினைவே தெரிந்து கண்ட முதல் சினிமா என்றால், அது வந்து, ஐயோ நியாபகம் வர மாடேங்குதே ?? ஹ் , நியாபகம் வந்துடுச்சி .. ஏதோ நம்ம விசயகாந்து படம்னு ( கரிமேடு கருவாயன் ) நினைக்குறேன்.. பாதி படத்துலே அலுத்து அடம்புடிச்சி வெளியே வந்ததா நியாபகம் ( அப்பவே பாருங்க நம்ம கேப்டன் படாத பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன் )

அந்த வயசுல நான் என்னத்த உணர்றது ? ஒண்ணுமே நினைவில் இல்லை.. அதனால் கேள்வியை நான் வாபஸ் வாங்கிக்கிறேன் ..



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?



கடைசியா நான் அமர்ந்து பாத்த தமிழ் சினிமா சிவாஜி ...
பாத்துட்டு டரியல் ஆனது வேற கதை... (ஸ்ரேயா நெம்ப அழகு ) ( இங்கு நான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை சொல்லி கொள்கிறேன்)



3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


நேற்று இரவு வெற்றிகரமா நாலாவது தடவையா வால் - இ படம் டி வி டியில் பார்த்தேன்..
வசனமே இல்லாமல், ஒரு அழகான காதல் கதை பார்க்கும் உணர்வு..
ரசித்து , உணர்ந்து பார்த்தது... ( என்னது இது தமிழ் சினிமா இல்லியா???) ( என்ன பண்றது தப்ப பதில் சொல்றது தானே நம்ம பழக்கம்)



4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மிகவும் தாக்கிய அப்படின்னா சந்திரமுகிய சொல்லலாம், என்ன, படம் ரிலீஸ் ஆன மொத நாளில் ( நடு இரவு ) அதி காலையில் 3 மணிக்கு டிக்கெட் வாங்க போய் போலீஸ் மாமாக்கள் தாக்கியது நினைவில் உள்ளது..

சீரியஸா சொல்லனுமா , காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் சீன் மிகவும் தாக்கியது ( பிடிச்சி இருந்ததுன்னும் சொல்லலாம்) அது ஏனோ தெரியல அப்போ நான் விடலை பருவத்தில் இருந்ததனால் கூட இருக்கலாம்..( நம்புங்க நான் சின்ன பையன் தான்)
அப்புறம் மனதை பாதித்த மற்றுமொரு சினிமா சேது . படம் முடிந்து நான் வெளியில் வரும்போது மனதில் மிகப்பெரிய வலி..


5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?



பாபா படத்திற்கு பாம .க வினர் செய்த அட்டூழியங்கள்.. நான் அப்பொழுது சிதம்பரத்தில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன். அங்கு அவர்கள் செய்த அராஜகங்கள் , படத்தை ஓட விடாமல் செய்தது.. அப்பப்பா இன்னும் நினைவில் இருக்கிறது. ( நான் அதிகமாக பார்த்த படங்களில் பாபாவும் ஒன்று ), சிதம்பரத்தில் மட்டும் 48 தடவை பார்த்தேன். இதில் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரையும் கைகாசில் கூட்டி கொண்டு போய் பார்த்தது ஒரு சாதனை ..( இருந்தும் படம் ஓடவில்லை என்பது வேறு விஷயம்)



5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

முதன்முதலில் டி டி எஸ் பற்றி கேள்விபட்டதும் , பிறகு அதை திரை அரங்கினில் பார்த்து உணர்ந்ததும் தான் என்னுடைய தமிழ் சினிமா - தொழில்நுட்ப சம்பவம்..

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

குமுதம்,ஆனந்த விகடன் , சினி பிட்ஸ், வண்ணத்திரை போன்ற சமூக அக்கறையுள்ள புத்தகங்கள் படிப்பேன்.. அதில் வரும் அனைத்து சினிமா பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து வைத்துக்கொண்டு நண்பர்களிடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் சொல்லி கொண்டு திரிவேன்.. இப்போ அதெல்லாம் இல்லை..


7.தமிழ்ச்சினிமா இசை?


ஆல் டைம் பேவரைட் இசைஞானி.. பிறகு ஏ.ஆர் . ரகுமான் மெலோடிக்கள் பிடிக்கும்..

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?



வேறு இந்திய மொழி படங்கள் என்றால், ஹிந்தி படங்கள் பார்ப்பேன்.
உலக மொழி படங்கள என்றால் ரஷ்ய மற்றும் கொரியன் படங்களின் டி வி டிக்கள் இங்கு நிறைய கிடைக்கும்.. அப்போ அப்போ நேரம் கிடைக்கும் பொது பார்ப்பேன்.
அதிகம் தாக்கியது என்றால், BLOOD IN DIAMOND, schindler's list , THE TERMINAL, CAST AWAY, இப்படி சொல்லிகிட்டே போகலாம்..





9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தொடர்ப்பும் இல்லை.. அதனால் அடுத்த
கேள்விக்கு தாவுகிறேன்..

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு நம்ம எதிர்காலமே ஒன்னும் தெரியில இதுல இது வேறயா??



11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

என்னை நீங்கள் கீழ்ப்பாகம் மருத்துவமனையில் பார்க்கலாம்.. அது தான் நடக்கும்..

ஏதோ என்னையும் மதித்து அழைத்த திரு மகேஷ் அவர்களுக்கு நன்றிகள்..
என்னால் முடிந்தவரை எனக்கு மனதில் தோன்றியவற்றை மட்டுமே இங்கு பதிந்துள்ளேன்.

இதுவும் தொடரோட்டம் போல தான். அதனால் நான் அழைக்கும் சிலர்..
( ஏதோ கூப்பிடனும்ன்னு எல்லாம் கூப்புடுல, அதனால ஒழுங்கா இந்த கொக்கிய கன்டினியு பண்ணுங்க, பண்ணல வீட்டுக்கு ஆட்டோ வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்)

நான் அழைப்பது இவர்களை தான்.. ( நாங்க எல்லோரும் ஒரு கூட்டணி , புதிதாக வலை பதிய ஆரம்பித்தவர்கள் ) ( கயல்விழி, விஷ்ணு இதில் சேர்த்தி இலலை. அவங்க எல்லாம் பெரிய ஆளுங்க )


1. அன்பு பதிவர் , சேலத்து சிங்கம் மோகன்
2. அன்பு தம்பி, சுபாஷ் ( எவ்ளோ நேரந்தான் நானும் மாட்டுறது, அதனால இப்போ உன் ட்டர்ன்)
3. அருமை கவிஞர் விஷ்ணு
4. எனக்கு பாராட்டு பத்திரம் வழங்கிய கயல்விழி அவர்கள்
5. காஞ்சி தலைவர் இளைய பல்லவன்

எல்லோரும் மறக்காம பதிவ போட்டுடுங்க அப்படின்னு சொல்லிட்டு இந்த பதிவமுடித்து கொள்கிறேன்..

நன்றி வணக்கம்..

இடைவெளி அவசியமா??

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ..., ஜனவரி பத்தாம் தேதி முதல் பிப்ரவரி முப்பதாம் சாரி சாரி இருபத்தி எட்டாம் ...